'மாண்டியாவை விட மாட்டேன்': சுயேச்சை எம்.பி.,

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
மாண்டியா : “மாண்டியாவை நான் விட மாட்டேன். மாண்டியாவும் என்னை விடாது,” என சுயேச்சை எம்.பி., சுமலதா அம்பரீஷ் கூறினார்.மாண்டியாவில் நடந்த பெங்களூரு - -மைசூரு இடையிலான 10 வழிச்சாலை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த, மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா அம்பரீஷ், நேற்று ரயில் நிலையத்தில் கூறியதாவது:மைசூரு 10 வழிச்சாலைப் பணிகள் தாமதமாகவில்லை. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில்
'மாண்டியாவை விட மாட்டேன்': சுயேச்சை எம்.பி.,

மாண்டியா : “மாண்டியாவை நான் விட மாட்டேன். மாண்டியாவும் என்னை விடாது,” என சுயேச்சை எம்.பி., சுமலதா அம்பரீஷ் கூறினார்.

மாண்டியாவில் நடந்த பெங்களூரு - -மைசூரு இடையிலான 10 வழிச்சாலை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த, மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா அம்பரீஷ், நேற்று ரயில் நிலையத்தில் கூறியதாவது:மைசூரு 10 வழிச்சாலைப் பணிகள் தாமதமாகவில்லை. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முடித்து, தசராவுக்குள் திறந்து வைக்கப்படும். அதுவரை பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். சாலை பணிகள் நடப்பதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தான், ரயிலில் வந்தேன்.

எனக்கு அரசியல் தவிர்க்க முடியாதது அல்ல. மாண்டியா மாவட்ட மக்களின் நன்றிக்கடன் தீர்ப்பதற்காகவே அரசியலில் உள்ளேன். மாண்டியாவை விட்டு செல்ல மாட்டேன்; என்னையும் மாண்டியா விடாது. இந்த தொகுதியை விட்டு செல்வேன் என பலர் பகல் கனவு காண்கின்றனர். அது என்றுமே பலிக்காது. தேர்தல் நெருங்கி வருவதால் இதுபோன்ற பொய் செய்தியை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற போலி விளம்பரங்களை இனியாவது கைவிடுங்கள். எனக்கு பதவி ஆசை கிடையாது. மக்கள் ஆசிர்வாதம் இருந்தால் அரசியலில் நீடிக்க முடியும். இல்லை என்றால் முடியாது.

எந்த கட்சியிலும் சேர ஆலோசனை நடத்தவில்லை. பெங்களூரு வடக்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் டிக்கெட் கேட்பதாக கூறுவதில் உண்மை இல்லை. எந்த கட்சியினரிடமும் கோரிக்கை வைக்கவில்லை. என் மகனுக்கும் டிக்கெட் கேட்கவில்லை; இனியும் கேட்க மாட்டேன். என் மகன், தற்போது சினிமா துறையில் வளர்ந்து வருகிறார். அவருக்கு அரசியல் ஆசை இருக்க வேண்டும். அரசியல் கட்சியில் இருந்து அழைப்பு வந்துள்ளது உண்மைதான். அதை தீர்மானிப்பது அவரது உரிமை. அதில் தலையிட மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X