குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
மைசூரு : குடும்ப தகராறில், தன் இரண்டு குழந்தைகளை கொன்று, தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மைசூரின் டி.நரசிபுராவை அருகே உள்ள ராமேகவுடனபுரா கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா, 32. இவருக்கும், மாவினஹள்ளியை சேர்ந்த நிங்கராஜு, 35 என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கீதா, 6; குஷ்மா, 4 என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கணவனுக்கு வேறு ஒரு
குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை

மைசூரு : குடும்ப தகராறில், தன் இரண்டு குழந்தைகளை கொன்று, தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மைசூரின் டி.நரசிபுராவை அருகே உள்ள ராமேகவுடனபுரா கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா, 32. இவருக்கும், மாவினஹள்ளியை சேர்ந்த நிங்கராஜு, 35 என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கீதா, 6; குஷ்மா, 4 என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி கோபித்து கொண்டு சில நாட்களுக்கு முன் தாய் வீட்டுக்கு வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சரோஜா, தன் இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்றார். பின், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டி.நரசிபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X