எல்மா: 'ஜி - 7' நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. உக்ரைனின் எதிர்கால வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவிடவும் ரஷ்யாவின் தவறுக்கு தகுந்த பாடம் கற்பிக்கவும் மாநாட்டில் உறுதி ஏற்கப்பட்டது.
அமெரிக்கா ஜெர்மனி பிரான்ஸ் இத்தாலி பிரிட்டன் கனடா ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற 'ஜி - 7' மாநாடு ஜெர்மனியின் எல்மா நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் 26, 27 தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.இந்த மாநாட்டில் உக்ரைன் போர் குறித்து விவாதம் பிரதான இடம் பிடித்தது.
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யவும் ரஷ்ய இறக்குமதி பொருட்களின் விலைகளை உயர்த்தவும் மேலும் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.உக்ரைனின் எதிர்கால வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவிடவும் ரஷ்யாவின் தவறுக்கு தகுந்த பாடம் கற்பிக்கவும் மாநாட்டில் உறுதி ஏற்கப்பட்டது.
மாநாடு முடிந்த பின் ஜி - 7 நாடுகளின் தலைவர்கள் ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் மாட்ரிட் நகருக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு நடக்கும் 'நேட்டோ' எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க சென்றனர்.நேட்டோ உறுப்பினராக இல்லாத ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.