டிஜிட்டல் முறையில் உயிர் வாழ் சான்று; வீட்டு வாசலுக்கு வரும் தபால் சேவை

Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
சிவகங்கை : ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்கள் வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் முறையில் உயிர் வாழ் சான்று வழங்க இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி தபால்காரர்கள் மூலம் வழங்கவுள்ளது.சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஜூலை 1 முதல் செப்டம்பர் 2022 வரை அவர்களது வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை

சிவகங்கை : ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்கள் வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் முறையில் உயிர் வாழ் சான்று வழங்க இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி தபால்காரர்கள் மூலம் வழங்கவுள்ளது.

சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஜூலை 1 முதல் செப்டம்பர் 2022 வரை அவர்களது வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இரு ஆண்டாக உயிர் வாழ் சான்று சமர்ப்பிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தன.

இந்தாண்டு செப்., மாதத்திற்குள் உயிர் வாழ் சான்று சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியர்கள் படும்சிரமங்களை தவிர்க்கும்விதமாக ஜீவன் பிரமான்திட்டத்தின் மூலம் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோ மெட்ரிக் முறையியை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு சேவை கட்டணமாக தபால்காரரிடம் 70 ரூபாய் செலுத்த வேண்டும்.ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், அலைபேசி எண், பி.பி.ஓ., எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் உயிர் வாழ் சான்று சமர்ப்பிக்க முடியும் என தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X