'பைக்'குடன் சேர்த்து சிமென்ட் சாலை : முதல்வர் வருகையால் வேலூரில் 'கூத்து'

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
வேலுார் :வேலுாருக்கு முதல்வர் ஸ்டாலின் வருகையால் அவசர கதியில் நடந்த சாலை பணியின் போது தெருவில் நிறுத்தியிருந்த 'பைக்'கை அகற்றாமல் அத்துடன் சேர்த்து சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது.வேலுார் மெயின் பஜார் அருகே காளிகாம்பாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவா 35; மளிகைக்கடை வைத்துள்ளார். இவரது பைக்கை நேற்றுமுன்தினம் கடை முன் நிறுத்தி சென்றார்.நேற்று காலை 6:00 மணிக்கு வந்து
 'பைக்'  சிமென்ட் சாலை  முதல்வர் வருகை வேலுார், கூத்து'

வேலுார் :வேலுாருக்கு முதல்வர் ஸ்டாலின் வருகையால் அவசர கதியில் நடந்த சாலை பணியின் போது தெருவில் நிறுத்தியிருந்த 'பைக்'கை அகற்றாமல் அத்துடன் சேர்த்து சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது.
வேலுார் மெயின் பஜார் அருகே காளிகாம்பாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவா 35; மளிகைக்கடை வைத்துள்ளார். இவரது பைக்கை நேற்றுமுன்தினம் கடை முன் நிறுத்தி சென்றார்.நேற்று காலை 6:00 மணிக்கு வந்து பார்த்தபோது பைக்குடன் சேர்த்து சிமென்ட் சாலை போடப்பட்டதை கண்டு அதிர்ச்சி
அடைந்தார்.


latest tamil news



கான்கிரீட் இறுகியுள்ளதால் பைக்கை எடுக்க முடியவில்லை. இதனால் இரண்டு மணி நேரம் போராடி சிமென்ட் கலவையை உடைத்து பைக்கை எடுத்துஉள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வேலுார் வருகையையொட்டி முன்னறிவிப்பு இல்லாமல் இரவோடு இரவாக பல இடங்களில் இதுபோல சாலை அமைத்துள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது:சாலை போடும் போது குப்பை கற்களை அகற்றாமல் சாலை போடுவதால் மக்கள் பணம் வீணாகிறது. பழைய சாலையை உடைத்து அகற்றாமல் அதன் மீதே பெயரளவுக்கு ஜல்லி பரப்பி சிமென்ட் கலவை போடுகின்றனர்.
வேலுார் மாநகராட்சியில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் சாலை போட டெண்டர் எடுத்துள்ளனர். அனுபவம் இல்லாதவர்களால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. ஏனோ தானோ என சாலை போடுவதால் மூன்று மாதம் கூட சாலை நிற்பதில்லை.இவ்வாறு கூறினர்.வேலுார் வரும் முதல்வர் இதுபோன்ற அலங்கோல பணிகளையும் பார்வையிட்டு ஒப்பந்ததாரர் மேற்
பார்வையிட வேண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூன்-202212:28:14 IST Report Abuse
ராஜா பலே வெள்ளையதேவா கடப்பா கல்லு, புரோட்டா கடை குஸ்திக்கு பிறகு இன்னுமொரு தரமான சம்பவம்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
29-ஜூன்-202212:23:55 IST Report Abuse
raja கேடுகெட்ட துக்ளக் ஆட்சி இது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.....
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
29-ஜூன்-202209:33:21 IST Report Abuse
sankaranarayanan திராவிஷா ஆட்சியே இப்படித்தான். தரம் பார்க்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X