வைத்திலிங்கத்தை இழுக்க பழனிசாமி தரப்பில் தூது

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியை, முன்னாள் அமைச்சரும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கத்திற்கு வழங்கி, தங்கள் பக்கம் இழுக்க, பழனிசாமி தரப்பில் துாது விடுக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பழனிசாமியை பொதுச் செயலராக்கும் முயற்சியில், பெரும்பாலான நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.இரட்டை தலைமை தொடர வேண்டும் என்பதில்,
ADMK, Vaithilingam, Palaniswami, Edappadi Palaniswami

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியை, முன்னாள் அமைச்சரும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கத்திற்கு வழங்கி, தங்கள் பக்கம் இழுக்க, பழனிசாமி தரப்பில் துாது விடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பழனிசாமியை பொதுச் செயலராக்கும் முயற்சியில், பெரும்பாலான நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.இரட்டை தலைமை தொடர வேண்டும் என்பதில், பன்னீர்செல்வம் தரப்பினர் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.


latest tamil news



உள்ளாட்சி இடைத்தேர்தலில், போட்டியிட விரும்பும் அ.தி.மு.க., வினருக்கு இரட்டை தலைமை கையெழுத்து இல்லாததால், இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் உருவாகி உள்ளது. இந்நிலையில், பன்னீர்செல்வம் வலதுகரமாக செயல்படும் வைத்தியலிங்கத்தை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும். அவரை மட்டும் இழுத்து விட்டால் பன்னீர்செல்வத்தை கட்டுப்படுத்தி விடலாம் என, பழனிசாமி தரப்பினர் கருதுகின்றனர்.

எனவே, வைத்தியலிங்கத்திற்கு துணை பொதுச்செயலர் பதவி வழங்குவதற்குரிய பேச்சு நடத்த, அவரிடம் பழனிசாமி ஆதரவாளர்கள் துாது சென்றுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ragam -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூன்-202208:06:45 IST Report Abuse
Ragam தழுதழுத்த உடல் பயிற்சி மூலம் கிடைத்த பதவியை தக்க வைக்க இன்னும் என்னென்ன உடற்பயிற்சி செய்ய வேண்டி உள்ளது?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-ஜூன்-202206:05:27 IST Report Abuse
Mani . V ஒரு 500 கோடியை கொடுத்து விலைக்கு வாங்க வேண்டியதுதானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X