காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் சுமுகமாக நடக்குமா?

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பான பேச்சு நடந்து வருகிறது.தமிழகத்திற்கு, ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி.,காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். மாதம்தோறும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், முறைப்படி நீரை கர்நாடகாவிடுவிப்பது கிடையாது. இந்நிலையில், மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டவும்,
CWMA meeting, Mekedatu, Cauvery water, Kaveri, Kaveri River water dispute

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பான பேச்சு நடந்து வருகிறது.

தமிழகத்திற்கு, ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி.,காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். மாதம்தோறும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், முறைப்படி நீரை கர்நாடகாவிடுவிப்பது கிடையாது. இந்நிலையில், மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டவும், சுற்றுச்சூழல் அனுமதி பெற வசதியாக, அணை குறித்து காவிரி ஆணைய கூட்டத்தில் விவாதிக்க வைக்கவும், கர்நாடகஅரசு தீவிர முயற்சிமேற்கொண்டுள்ளது.

அதற்கேற்ப, மேகதாது அணை தொடர்பாக விவாதம் நடத்தப்படும் என, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் அறிவித்துள்ளார். அணைகட்டினால் நீர் வரத்து பாதிக்கப்படும் என்பதால், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


latest tamil news



இந்த சூழலில், ஜூன், 17, 23ல் ஆணைய கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டாலும் நடத்தப்படவில்லை. இறுதியாக வரும் 6ம் தேதி கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேகதாது அணை தொடர்பாக, இருதரப்பிலும் வாக்குவாதம் எழ வாய்ப்புள்ளது. எனவே, இக்கூட்டத்தை சுமுகமாக நடத்துவதற்கான பேச்சில், காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

ஆனால், ஆணைய கூட்ட நிரலில், மேகதாது அணை தொடர்பான விவாதம் இடம்பெறக் கூடாது என, தமிழக பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே, அறிவித்தபடி, ஜூலை 6ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriniv - India,இந்தியா
29-ஜூன்-202208:26:47 IST Report Abuse
Sriniv வணக்கம். சுமுகம் என்றால் அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் பொறுத்து கொள்ள வேண்டுமா ? இந்த திட்டத்திற்கு அனுமதி கூடவே கூடாது
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஜூன்-202205:54:20 IST Report Abuse
Kasimani Baskaran ஒருவர் காலில் ஒருவர் விழ மாட்டார்கள் என்பதை மட்டும் நிச்சயமாகச்சொல்லலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X