பாரம்பரிய அங்கியுடன் உதயநிதி காலில் விழுந்த மேயருக்கு சிக்கல்

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (71) | |
Advertisement
தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியின் காலில், 'டொபுக்'கென விழுந்து வணங்கிய தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்ற பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, மாவட்ட வாரியாக தி.மு.க., சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்
உதயநிதி, திராவிடத் திருவிழா, மேயர் ராமநாதன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியின் காலில், 'டொபுக்'கென விழுந்து வணங்கிய தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்ற பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, மாவட்ட வாரியாக தி.மு.க., சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளது. 'திராவிடத் திருவிழா' என்ற பெயரில் மாவட்டந்தோறும் உதயநிதி சுற்றுப்பயணம் செல்கிறார். கட்சியில் நலிந்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி, கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் உதயநிதி பங்கேற்கிறார்.

சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் உதயநிதி சுற்றுப்பயணம் சென்றார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா, பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கும் விழா நடந்தது.இந்த விழாவில் பங்கேற்க, தஞ்சாவூருக்கு சென்ற உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.


latest tamil news



அப்போது தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன், மேயர் அங்கி அணிந்திருந்த நிலையில், திடீரென உதயநிதி காலில் 'டொபுக்'கென விழுந்து வணங்கினார்.இந்த வீடியோ பதிவு, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேயர் பதவி மற்றும் மேயர் நாற்காலி, அங்கி உடை, செங்கோல் போன்றவைக்கு பராரம்பரிய மரியாதையும், மரபும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேயர் அங்கி உடை அணிந்த வண்ணம், உதயநிதி காலில் விழுந்து மேயர் வணங்கியதால், வணக்கத்துக்குரிய மேயரின் மாண்புக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில், மேயர் காலில் விழும் கலாசாராத்தை ஊக்குவிக்கலமா; இது தான் சமூக நீதியா; சமத்துவமா என்ற கேள்விகளை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பலரும் தி.மு.க.,வை வறுத்தெடுக்கின்றனர். மேலும், மேயர் ராமநாதன் உடனே தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
30-ஜூன்-202217:47:12 IST Report Abuse
sankar அண்ணாதுரை , கருணாநிதி, எம்ஜியார் காலத்தில் அவங்க காலில் விழுவதை அனுமதிக்கமாட்டங்க. பாரம்பரியம் மிக்க சபாநாயகர் பதவியில இருந்த சேடப்பட்டி முத்தையா சிறிதும் வேட்கமில்லாமல், சட்டசபையில் ஜெ.வின் காலில் விழுந்ததை எல்லாரும் பார்த்தனர். ஜெ. அதைக் கண்டிக்காமல் பெரிதும் பரவசப்பட்டு புளகாங்கிதம் அடைந்தது கண்டு தலையில் அடித்துக் கொண்டனர்.வயதில் பெரிய மந்திரிகளும் அதையே பின்பற்றினர். அப்போதே இந்த திராவிட மாடல் ஆரம்பம். இனி மாறாது.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
29-ஜூன்-202213:56:50 IST Report Abuse
பாமரன் கேவலமான செயல்... 😡 ஆபீசில் எப்போ காந்தி படத்துக்கு பதில் கண்ட நா...தா...ரிங்க படத்தை வைக்க ஆரம்பிச்சாங்களோ அப்பவே சொன்னோம் இது தப்புன்னு... இப்போ உதயநிதி படத்தை வைக்கறதில் வந்து நிக்குது... இன்னும் என்னென்னல்லாம் வரப்போகுதோ... பகவானே.. 🙄🙄
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
29-ஜூன்-202213:14:59 IST Report Abuse
r.sundaram சிறியவர் காலில் பெரியவர் விழுந்து வாங்குவதுதான் திராவிட மாடல். ஒரு பதவியின் மதிப்பும் மரியாதையும் தெரிந்தால் தானே. எல்லாமே கட்சி, முதல்வர், அவர் குடும்பம் என்று நினைத்து விட்டால், பதவியின் கண்ணியமும், மதிப்பும், மரியாதையும் மறந்துதான் போகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X