3 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாயுது பி.எஸ்.எல்.வி.,- சி53

Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
சென்னை : ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மூன்று செயற்கைக் கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட்டை நாளை(ஜூன் 30) மாலை 6:00 மணிக்கு விண்ணில் ஏவ 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.'இஸ்ரோ'எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு நாட்டின் பாதுகாப்பு தொலை தொடர்பு தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி. வகை
pslv c53, PSLV, ISRO, rocket,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மூன்று செயற்கைக் கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட்டை நாளை(ஜூன் 30) மாலை 6:00 மணிக்கு விண்ணில் ஏவ 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.

'இஸ்ரோ'எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு நாட்டின் பாதுகாப்பு தொலை தொடர்பு தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதுதவிர வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான டி.எஸ். - இ.ஓ. உட்பட மூன்று செயற்கைக் கோள்கள் பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட் வாயிலாக நாளை மாலை 6:00 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 25 மணி நேர 'கவுன்ட் டவுன்' இன்று மாலை 5:00 மணிக்கு துவங்குகிறது. சிங்கப்பூரை சேர்ந்த மூன்று செயற்கைக் கோள்களில் முதன்மையானதான டி.எஸ். - இ.ஒ. செயற்கைக் கோள் 365 கிலோ எடை உடையது. இது தெளிவாக வண்ண புகைப்படங்களை எடுக்கும் திறன் உடையது.


latest tamil news




அடுத்து 155 கிலோ எடை உடைய 'நியூசர்' செயற்கைக்கோள் இரவு பகல் என அனைத்து வானிலை சூழலிலும் புவியை துல்லியமாக படம் எடுக்கும். சிங்கப்பூரை சேர்ந்த நன்யாங் தொழில்நுட்ப பல்கலை மாணவர்கள் வடிவமைத்த 2.8 கிலோ எடை உடைய 'ஸ்கூப் - 1' செயற்கைக்கோள் கல்வி பணிகளுக்காக அனுப்பப்பட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X