சர்ச் கட்டுமானத்திற்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
மதுரை : அரிமளம் பேரூராட்சியில் சர்ச் கட்டுமானத்திற்கு தடையில்லா சான்று வழங்கிய கலெக்டரின் உத்தரவிற்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் புதுார் அக்ரஹாரம் சிவகுமார் தாக்கல் செய்த மனு:அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட சர்வே எண்ணில், சர்ச் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவில்லை. தடை
சர்ச் கட்டுமானத்திற்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை : அரிமளம் பேரூராட்சியில் சர்ச் கட்டுமானத்திற்கு தடையில்லா சான்று வழங்கிய கலெக்டரின் உத்தரவிற்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் புதுார் அக்ரஹாரம் சிவகுமார் தாக்கல் செய்த மனு:அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட சர்வே எண்ணில், சர்ச் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவில்லை. தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வழிபாடு நடத்துவதால், மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சர்ச் கட்டினால், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

சர்ச் கட்டுமானத்திற்கு கலெக்டர் தடையில்லா சான்று வழங்கியுள்ளார். இதில், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளவில்லை. கலெக்டர் வழங்கிய தடையில்லா சான்றிற்கு தடை விதிக்க வேண்டும். சர்ச் கட்டுமானத்திற்கு கட்டட அனுமதி வழங்கக் கூடாது என, அரிமளம் பேரூராட்சிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ''கலெக்டரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. புதுக்கோட்டை கலெக்டர், ஆர்.டி.ஓ., அரிமளம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது,'' என்றார்.வழக்கு விசாரணை, ஜூலை 25க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
think out of box - london,யுனைடெட் கிங்டம்
29-ஜூன்-202214:01:08 IST Report Abuse
think out of box Quickly build Ram Temple there.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
29-ஜூன்-202213:28:33 IST Report Abuse
r.sundaram அரசின் ஆதரவு இருக்கும்போது, உயர்நீதிமன்ற உத்தரவுகள் எல்லாம் மதிக்கப்படுமா என்ன? இப்படி பிரச்சனை இருக்கும் இடத்தில் கட்டுமானத்திற்கு ஆர்டிஓ, கலெக்டர் எல்லோரும் அனுமதி அளிப்பதில் இருந்தே அதற்க்கு அரசின் ஆதரவு இருப்பது தெரிய வில்லை?
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
29-ஜூன்-202211:58:03 IST Report Abuse
அம்பி ஐயர் சூப்பர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X