ஓரம் கட்டப்பட்டோருக்கு பன்னீர்செல்வம் 'வலை'

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சேலம்: கொங்கு மண்டலத்தில் பழனிசாமி, அவரின் ஆதரவு முன்னாள் அமைச்சர்களால் ஓரம் கட்டப்பட்ட, முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்க, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, பொதுச் செயலர் பதவியை பெற மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களை
ADMK, OPS, Panneerselvam

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சேலம்: கொங்கு மண்டலத்தில் பழனிசாமி, அவரின் ஆதரவு முன்னாள் அமைச்சர்களால் ஓரம் கட்டப்பட்ட, முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்க, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.

அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, பொதுச் செயலர் பதவியை பெற மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களை தன் வசப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், தனக்கு குறைந்த அளவிலான நிர்வாகிகளின் ஆதரவே உள்ளதால், பன்னீர்செல்வம் சட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

அதே நேரத்தில், தலைமை பதவியை தக்க வைத்துக் கொள்ளவும், கட்சியில் தன் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கிலும், தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக, கொங்கு மண்டலத்துக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். கொங்கு மண்டலத்தை பழனிசாமி, அவரின் ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் தங்களின் கோட்டை என, கூறி வருகின்றனர்.


latest tamil news


அதை உடைக்கும் வகையில், கொங்கு மண்டலத்தில், குறிப்பாக சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து, அ.தி.மு.க., தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த மாவட்டங்களில், ஆதரவாளர் பட்டியலை பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத், வைத்திங்கம், கோவை செல்வராஜ் ஆகியோர் தயாரித்து, அதில் இடம் பெற்றுள்ளோரிடம், ரகசிய பேச்சை துவக்கி விட்டனர்.

குறிப்பாக, 2017ல் அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம், பழனிசாமி என, இரண்டு அணிகளாக செயல்பட்ட போது, கொங்கு மண்டலத்தில் பன்னீர்செல்வம் பின் அணிவகுத்தவர்களை, தொடர்பு கொண்டு வருகின்றனர். அந்த கால கட்டத்தில், சேலம் மாவட்டத்தில், 24 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர். அதில், இரண்டு பேர் இறந்து விட்ட நிலையில், மீதமுள்ள 22 பேரில், 18 பேர் பழனிசாமி பக்கம் உள்ளனர்.

இவர்களின் சண்டை பிடிக்காமல், நான்கு பேர் ஒதுங்கிக் கொண்டனர். தற்போது அவர்களை தனக்கு ஆதரவாக, சேலம் மாவட்டத்தில் களம் இறக்க பன்னீர்செல்வம் தயாராகி விட்டார். இதற்காக, வைத்திலிங்கம் மூலம் பேச்சு நடத்தி வருகிறார். இதே போல், கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.பி.,க்களுடன் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில் பன்னீர்செல்வம் கொங்கு மண்டலத்தில், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் தன் ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் சந்திப்பார் என, அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
29-ஜூன்-202210:52:04 IST Report Abuse
raja என்னத்த சுத்துனாலும் உண்மையான எம் கி ஆர் தொண்டர்களை விலைக்கு வாங்க முடியாது... பன்னீர் இனிமே பாலைக்கு போயி மொட்டையா போட்டு தியானம் பண்ணலாம்...அதிமுக தொண்டர்கள் அவ்வளவு கோவத்தில் இருக்கிறார்கள் கேடுகெட்ட விடியாத ஆட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X