ரஷ்யாவின் தவறுக்கு பாடம் கற்பிக்க 'ஜி - 7' மாநாட்டில் தலைவர்கள் உறுதி

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
எல்மா : 'ஜி - 7' நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. உக்ரைனின் எதிர்கால வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவிடவும் ரஷ்யாவின் தவறுக்கு தகுந்த பாடம் கற்பிக்கவும் மாநாட்டில் உறுதி ஏற்கப்பட்டது.அமெரிக்கா ஜெர்மனி பிரான்ஸ் இத்தாலி பிரிட்டன் கனடா ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற 'ஜி - 7' மாநாடு ஜெர்மனியின் எல்மா நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் 26, 27 தேதிகளில்
ரஷ்யா, ஜி 7, Conference, G7, Countries,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

எல்மா : 'ஜி - 7' நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. உக்ரைனின் எதிர்கால வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவிடவும் ரஷ்யாவின் தவறுக்கு தகுந்த பாடம் கற்பிக்கவும் மாநாட்டில் உறுதி ஏற்கப்பட்டது.

அமெரிக்கா ஜெர்மனி பிரான்ஸ் இத்தாலி பிரிட்டன் கனடா ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற 'ஜி - 7' மாநாடு ஜெர்மனியின் எல்மா நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் 26, 27 தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த மாநாட்டில் உக்ரைன் போர் குறித்து விவாதம் பிரதான இடம் பிடித்தது. ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யவும் ரஷ்ய இறக்குமதி பொருட்களின் விலைகளை உயர்த்தவும் மேலும் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.


latest tamil news



உக்ரைனின் எதிர்கால வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவிடவும் ரஷ்யாவின் தவறுக்கு தகுந்த பாடம் கற்பிக்கவும் மாநாட்டில் உறுதி ஏற்கப்பட்டது.மாநாடு முடிந்த பின் ஜி - 7 நாடுகளின் தலைவர்கள் ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் மாட்ரிட் நகருக்கு புறப்பட்டு சென்றனர்.

அங்கு நடக்கும் 'நேட்டோ' எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க சென்றனர்.நேட்டோ உறுப்பினராக இல்லாத ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
29-ஜூன்-202216:38:08 IST Report Abuse
Vena Suna அமெரிக்கா தான் எல்லா இடங்களிலும் குழப்பத்தை உண்டு பண்ணுகிறான். இவன் உக்ரைனை நட்பு பாராட்ட போய் ரஷ்யா அவனை தாக்கினான்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
29-ஜூன்-202211:51:00 IST Report Abuse
Anand இப்படி சொல்லி சொல்லியே உக்ரைனை நாசமாக்கிவிட்டார்கள்? இவனுங்களோட கைக்கூலி உக்ரைன் அதிபரை அந்நாட்டை விட்டு விரட்டியடிக்கவேண்டும்.....
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
29-ஜூன்-202210:45:16 IST Report Abuse
தமிழ்வேள் நேட்டோ என்ற ஒரு அமைப்பு தேவையா? இரண்டாம் உலகப்போர் முடிந்த கையோடு கலைக்கப்பட்டிருக்கப்படவேண்டிய ஒரு அமைப்பு, இன்று வரை எதற்கு யாருடைய சுயநலத்துக்காக இன்னும் உயிரோடு இருக்கிறது? இந்த அமைப்பை கலைப்பது முக்கியம். நேட்டோவை வைத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகள், ஆசிய எல்லைப்புற நாடுகளை மிரட்டுதல், களவாணித்தனம் செய்தல் போன்றவை அதிகமாக உள்ளது. நேட்டோ இருக்கும் வரை பிரச்சினைகளும் இருக்கும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X