ராஜபாளையம் மலைப்பகுதியில் தொடர் காட்டு தீயால் பாதிப்பு

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ராஜபாளையம் : ராஜபாளையம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென பற்றி எரியும் காட்டுத் தீயால் வன விலங்குகளுக்கும், அரிய வகை மூலிகைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வனச்சரகம் அய்யனார் கோவில், நீராவி, வாளைகுளம் ராஜாம்பாறை உட்பட ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் காட்டெருமை, புலி, யானை, மான் என பல்வேறு விலங்குகள் உள்ளன.
ராஜபாளையம்,  மலைப்பகுதி, காட்டு தீ, பாதிப்பு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராஜபாளையம் : ராஜபாளையம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென பற்றி எரியும் காட்டுத் தீயால் வன விலங்குகளுக்கும், அரிய வகை மூலிகைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வனச்சரகம் அய்யனார் கோவில், நீராவி, வாளைகுளம் ராஜாம்பாறை உட்பட ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் காட்டெருமை, புலி, யானை, மான் என பல்வேறு விலங்குகள் உள்ளன.


latest tamil news




நீராவி பகுதியில் நேற்று முன்தினம் இரவு தீ பற்றியது. மலையின் பல இடங்களில் ஆங்காங்கு தீ எரிந்து வருகிறது. அந்த தீ, தற்போது பலத்த காற்றால் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி அரிய புல்வகைகள், மூலிகை செடிகள், மரங்கள், வன விலங்குகள் தீயில் பாதிக்கப்படுகின்றன. வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த, முதற்கட்டமாக தீ தடுப்பு, வனக்காவலர்கள் அடங்கிய ஆறு பேர் குழுவினர் சென்றுள்ளனர்.

மேலும் தீ பரவாமல் தடுக்க, தொடர்ந்து அதிகமான நபர்களை அனுப்பி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஜூன்-202218:15:56 IST Report Abuse
Kasimani Baskaran திடீர் என்று எப்படி தீப்பற்றும்? கேடிகள் உல்லாசமாக பொழுது போக்க சென்று விட்டு சிகரெட் துண்டுகளை பொறுப்பில்லாமல் வீசி தீவைப்பது சாதாரணம்.
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
29-ஜூன்-202210:49:34 IST Report Abuse
Manguni மலையை ஆக்கிரமிக்கும் பொருட்டு திருட்டு ரயில் ஏறி மொத்த இந்தியாவை கொள்ளை அடிக்கும் கும்பலின் சதி யா என்று விசாரிக்க வேண்டும். அதுவா தீப்பிடிக்குதாம்... இதை எண்ணையை நம்ப சொல்றியா.. அதுவுமில்லாம பல இடத்தில ஒரே நேரத்தில.. மொதல்ல இந்த குடிகார ஞமிலிகளை கொள்ள வேண்டும்.. அதுகள் பீடி பத்த வைச்சு கொழுத்து விடுத்தது...
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூன்-202210:14:19 IST Report Abuse
Chinnappa Pothiraj வனம் வனம் சார்ந்த மரம் காடுகளை பாதுகாக்க வேண்டும்,காட்டை அழிக்கும் சமூக விரோதிகளின் செயல்களாக இருக்கவாய்ப்புள்ளது. ஒருபக்கம் காடுகளை வளர்க்க பொது மேடையில் பிரச்சாரம் மறுபக்கம் காட்டை அழித்து ரிசார்ட்ஸ் சொகுசு பங்களா கட்ட கனிம கொள்ளை அடிக்க திட்டமிருந்தாலும் இருக்கலாம்.வருங்கால இளைய தலைமுறைகள் நலமும்,தேச நலன்கருதி நாட்டு மக்களும் ஆட்சியாளர்களும் செயல்படவேண்டும்,வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X