'எகிறுது' கொரோனா: கோவையில் 9 'மைக்ரோ' கட்டுப்பாட்டு பகுதிகள்!

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கோவை: கோவையில் ஒன்பது இடங்களில் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதால், அப்பகுதிகள் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 100க்கும் மேல் அதிகரித்து செல்கிறது. இதனை கட்டுப்படுத்த, மாவட்ட சுகாதாரத்துறையினர் சார்பில், பரிசோதனையை அதிகரித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: கோவையில் ஒன்பது இடங்களில் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதால், அப்பகுதிகள் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.



latest tamil news




கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 100க்கும் மேல் அதிகரித்து செல்கிறது. இதனை கட்டுப்படுத்த, மாவட்ட சுகாதாரத்துறையினர் சார்பில், பரிசோதனையை அதிகரித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் குரும்பபாளையம் பகுதியில் உள்ள ஒரே தெருவில் நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு, ஆர்.எஸ்.புரத்தில் ஒரே வீட்டில் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது போன்றே வடவள்ளி, தொண்டாமுத்துார், பேரூர் செட்டிப்பாளையம் உள்ளிட்ட ஒன்பது இடங்கள், 'மைக்ரோ கன்டெய்ன்மென்ட்' பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் துாய்மை பணியாளர்களை கொண்டு கிருமி நாசி தெளிப்பது, பாதிக்கப்பட்டோரை கண்காணிப்பது போன்ற பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


latest tamil news




இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில்,''கோவை மாவட்டத்தில் தற்போது ஒன்பது இடங்களை 'மைக்ரோ கன்டெய்ன்மென்ட்' பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் நோய் பாதிப்பு இருந்தால் வீட்டை மட்டும் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஒரு வீதியில் பாதிக்கு மேல் எண்ணிக்கை அதிகம் இருந்தால், வீதி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும். இந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும். பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
29-ஜூன்-202214:53:23 IST Report Abuse
S.Baliah Seer கோவை கேரளாவின் பாலக்காட்டை ஒட்டியிருப்பதால் அங்கு வைரஸ் தொற்றுக்கள் இருப்பது சகஜம். மழை மற்றும் குளிர்ப் பிரதேசங்களில் வைரஸ் உற்பத்தியாவதை எந்த விஞ்ஞானத்திலாலும் தடுக்க முடியாது. ஆனால் அவற்றை கொரோன என்பது ஏமாற்றுத்தனம்.கொரோனா சோதனையை தடை செய்யவும் கொரோனா என்ற வார்த்தையை தடை செய்யவும் பொதுநல விரும்பிகள் நம்நாட்டின் நீதிமன்றங்களுக்குச் செல்லவேண்டுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X