உதய்பூர் கொலை: என்ஐஏ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (60) | |
Advertisement
புதுடில்லி: ராஜஸ்தானின் உதய்பூரில், தையல் தொழிலாளி தலையை துண்டித்து சமூக வலை தளங்களில் வீடியோவாக வெளியிட்ட கொலையாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் சர்வதேச தொடர்புகள் குறித்து என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம் மால்டா என்ற நகரில், ஜவுளிக்கடைக்குள் அத்துமீறி புகுந்த
MHA, NIA, Udaipur, Rajasthan, Kanhaiya Lal, Brutal Murder, International Links, உள்துறை அமைச்சகம், உதய்பூர், ராஜஸ்தான், கன்னையா லால், கொடூர கொலை, தலை துண்டிப்பு, சர்வதேச தொடர்பு, என்ஐஏ, விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ராஜஸ்தானின் உதய்பூரில், தையல் தொழிலாளி தலையை துண்டித்து சமூக வலை தளங்களில் வீடியோவாக வெளியிட்ட கொலையாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் சர்வதேச தொடர்புகள் குறித்து என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம் மால்டா என்ற நகரில், ஜவுளிக்கடைக்குள் அத்துமீறி புகுந்த இரு மர்ம நபர்கள், அங்கு வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்தனர். இதன் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட இளைஞர் கன்னையா லால் என்பதும், அப்பகுதி ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த தையல் தொழிலாளி என்பதும், சர்ச்சையில் சிக்கியுள்ள பா.ஜ., செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால், அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


latest tamil news


இளைஞரை கொடூரமாக கொன்ற கொலையாளிகள் மிரட்டல் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் யாரேனும் நுபுர் சர்மாவிற்கு ஆதரவு அளித்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் என எச்சரிக்கும் விதமாக ஆயுதங்களை காண்பித்து அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர கொலை சம்பவம் எதிரொலியாக பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தேறின. இதனால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் கொலையாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர கொலைக்கு பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா என சர்வதேச தொடர்புகள் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூன்-202219:37:01 IST Report Abuse
அப்புசாமி சர்வதேச மூர்க்கனுங்க எதுக்கு? உள்ளூரிலேயே வேண பேர் இருக்காங்க.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
29-ஜூன்-202219:35:23 IST Report Abuse
MARUTHU PANDIAR இவனுகள வெச்சு கசாப் மாடலில் பிரியாணி பொங்கி போட்டு வருடக் கணக்கில் அழகு பாத்தா ,,அடுத்தடுத்து மூர்க்கன் டீம்கள் கொலை வெறியோடு ரெடியாய்க்கிட்டு தான் இருக்கும்+++கட்டுப் படுத்தவே முடியாது+++எது எதையோ எல்லாம் அஜெண்டாக விசாரணைக்கு எடுத்து கொள்ளும் நீதி மன்றம் இவனுக விசாரணையை உடனே தொடங்கி முடிக்க வேண்டும்,,தண்டனை தீர்ப்பு வந்த உடனே நிறைவேற்றப் பட வேண்டும்+++தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் நாட்டின் ஆபத்து மீட்டரில், அளவு நிச்சயம் ஏறிக் கொண்டே இருக்கும்,
Rate this:
Cancel
Nesan - KARAIKUDI,இந்தியா
29-ஜூன்-202217:58:03 IST Report Abuse
Nesan குற்றவாளிகளுக்கு அதே போல மரண தண்டனை வழங்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X