ஜெ., கார் டிரைவர் கனகராஜ் சகோதரர் கைது

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி, கலைவாணி சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், பணிக்கனூர் பகுதியில் கனகராஜ் பெயரில் உள்ள நிலத்தை உறவினர் ஒருவர் விலைக்கு கேட்பதாக, கனகராஜ் இளைய சகோதரர் பழனிவேல் என்பவர், கலைவாணியை ஊருக்கு
ஜெ., கார் டிரைவர் கனகராஜ் சகோதரர் கைது

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி, கலைவாணி சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், பணிக்கனூர் பகுதியில் கனகராஜ் பெயரில் உள்ள நிலத்தை உறவினர் ஒருவர் விலைக்கு கேட்பதாக, கனகராஜ் இளைய சகோதரர் பழனிவேல் என்பவர், கலைவாணியை ஊருக்கு வரவழைத்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் போது இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கலைவாணி அளித்த புகாரின் அடிப்படையில்தான் தனது அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டதாகவும், அந்த புகாரை வாபஸ் பெறும்படியும் பழனிவேல் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக கலைவாணில அளித்த புகரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஜலகண்டாபுரம் போலீசார் பழனிவேலுவை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-ஜூன்-202215:20:40 IST Report Abuse
D.Ambujavalli அந்தம்மா மூலம் குடும்ப தகராறை வெளிக்கொணர்ந்தது பெரிய சாதனையா? கொடநாடு கேஸ் மூடப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது 'விபத்தை' அரங்கேற்றியவர் எல்லாம் செட்டில் பண்ணிவிட்டு தலைமையை நோக்கி ராஜநடை போட்டுக்கொண்டிருக்கிறார்
Rate this:
Cancel
29-ஜூன்-202212:52:01 IST Report Abuse
Prasanna Varadhan மிகவும் சாதுர்யமாக கொடநாடு பெயரை குறிப்பிடாமல் ஏதோ சாதாரண விஷயம் போல வந்துள்ள செய்தி மக்கள் விரும்பும் பத்திரிகைகளுக்கு அழகல்ல ...
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
29-ஜூன்-202212:42:21 IST Report Abuse
அம்பி ஐயர் இதுக்கும் ஜெ வுக்கும் என்ன சம்பந்தம்??? எதுக்கு அவர் பேரைப் பயன்படுத்தணும்???
Rate this:
29-ஜூன்-202216:44:24 IST Report Abuse
Prasanna Varadhanகனகராஜின் மற்றொரு அண்ணண் கைதுக்கு காரணமான புகாரை திரும்ப பெற மிரட்டிய குற்றசாட்டில்தான் இவன் கைது என்று தகவல்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X