ஜெ., கார் டிரைவர் கனகராஜ் சகோதரர் கைது - Jayalalitha | Dinamalar

ஜெ., கார் டிரைவர் கனகராஜ் சகோதரர் கைது

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (4) | |
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி, கலைவாணி சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், பணிக்கனூர் பகுதியில் கனகராஜ் பெயரில் உள்ள நிலத்தை உறவினர் ஒருவர் விலைக்கு கேட்பதாக, கனகராஜ் இளைய சகோதரர் பழனிவேல் என்பவர், கலைவாணியை ஊருக்கு
ஜெ., கார் டிரைவர் கனகராஜ் சகோதரர் கைது

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி, கலைவாணி சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், பணிக்கனூர் பகுதியில் கனகராஜ் பெயரில் உள்ள நிலத்தை உறவினர் ஒருவர் விலைக்கு கேட்பதாக, கனகராஜ் இளைய சகோதரர் பழனிவேல் என்பவர், கலைவாணியை ஊருக்கு வரவழைத்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் போது இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கலைவாணி அளித்த புகாரின் அடிப்படையில்தான் தனது அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டதாகவும், அந்த புகாரை வாபஸ் பெறும்படியும் பழனிவேல் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக கலைவாணில அளித்த புகரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஜலகண்டாபுரம் போலீசார் பழனிவேலுவை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X