வேளாண் பல்கலை பி.எஸ்சி., ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
கோவை: வேளாண் பல்கலையில் பி.எஸ்சி., அக்ரி., படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று துவங்கியது.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்புக்கல்லுாரிகள், 28 இணைப்புக் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பி.எஸ்சி., அக்ரி படிப்பின் கீழ், 12 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில், பல்கலை உறுப்பு கல்லூரிகளில், 2,148,
வேளாண் பல்கலை பி.எஸ்சி., ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கோவை: வேளாண் பல்கலையில் பி.எஸ்சி., அக்ரி., படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று துவங்கியது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்புக்கல்லுாரிகள், 28 இணைப்புக் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பி.எஸ்சி., அக்ரி படிப்பின் கீழ், 12 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில், பல்கலை உறுப்பு கல்லூரிகளில், 2,148, இணைப்பு கல்லூரிகளில், 2,337 என, மொத்தம், 4,485 இடங்கள் உள்ளன. வரும், 2022 - 23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை பல்கலை நிர்வாகம் துவங்கியுள்ளது.

வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:இன்று(நேற்று) மாலை 5:00 மணி முதல் இணையதளம் செயல்படும். ஜூலை, 27 வரை மாணவர்கள் http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடபிரிவு போன்ற அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும்.

முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு இடஒதுக்கீட்டுக்கு, 971 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரே விண்ணப்பத்தில் அனைத்து பாடப்பிரிவுக்கும் விண்ணப்பிக்க முடியும். ஒருவர் ஒவ்வொரு பாட பிரிவுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை.தமிழ், ஆங்கில வழியில் வேளாண், தோட்டக்கலை பாடபிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மாணவர்களின் நலனுக்காக, 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியான பின், வேளாண் படிப்புகளுக்கான சேர்க்கை துவங்கும். செப்., மாதத்தில் வகுப்புகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X