கர்ப்பக் காலம் எல்லா பெண்களுக்கு ஒரு கனவுக்காலம். நம்முள் ஒரு உயிர் வளரும் போது பெண்களுக்கு உடலின் அமைப்பில் மாற்றங்கள் படி படியாக உருவாகும். தாய்மை நேரத்தில் உடல் எடை கூடும். உடல் உறுப்புகளில் குறிப்பாக மார்பகங்கள், பின் பகுதி, தொடைகள் ஆகியவற்றில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். எனவே, அந்தக் காலகட்டத்தில் எந்த ஆடை அணிந்தாலும் சரியான ஃபிட்டிங்கில் இருக்காது.
![]()
|
நீங்கள் தாய்மைக்குத் தயாராகும்போது உங்கள் உடலைக் கொண்டாடும் நேரமாக அதை மாற்றுங்கள். உடலுக்கு வசதியான மகப்பேறு ஆடைகள் முதலில் தேர்வு செய்வது அவசியம். மேலும் வேலைக்கு செல்ல தேவைப்படும் ஆடைத் தேர்வு, உங்களை தடையின்றி தன்னம்பிக்கையுடன் பணியை தொடரச் செய்யும்.
கர்ப்பக்காலத்தில் வளைகாப்பு, குழந்தைக்கு பெயர் சூட்டுதல் போன்ற பல விசேஷங்கள் வரும். போதாகுறைக்கு இப்போ கர்ப்பகால போட்டோ ஷூட் எடுப்பதும் பேஷனாக உள்ளது. அதனால் கர்ப்பக் காலத்தில் ஆடை தேர்வு செய்வது மிகவும் முக்கியம் பெறுகிறது. அதற்கான சில டிப்ஸ்களை இப்போ பார்க்கலாம்.
துணித் தேர்வு :
![]()
|
எந்த பருவ காலம் என்பதைப் பார்த்து, அதற்கு ஏற்றவாறு உங்கள் ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும். கோடை காலத்தில் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும் பருத்தி, போன்ற இயற்கை சார்ந்த துணிகளை தேர்வு செய்யுங்கள். மழை மற்றும் பனிக்காலத்தில் உங்களுக்கு பிடித்த துணி வகைகளைத் தேர்வு செய்யலாம்.
சைஸ் தேர்வு :
இது மிகவும் கடினமான விஷயம். முதல் மூன்று மாதங்களுக்கு கவலை இல்லை. ஆனால் அதற்கு பிறகு, 4 முதல் 6 மாதம் வரை, மற்றும் 6 முதல் 10 மாதம் வரை எனத் தனித்தனியாக ஆடைகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். அதனால் அதை கருத்தில் கொண்டே கொஞ்சம் லூஸ் பிட்டிங்கில் ஆடை தேர்வு செய்வது முக்கியம்.
நீங்கள் பேஷன் விருப்பிகளாக இருந்தால் உடைகளில் பல சாய்ஸ்கள் உள்ளன.
![]()
|
• சேலை விரும்பிகள் என்றால் இது ஆரோக்கியமான சாய்ஸ். ஏன் என்றால் கர்ப்பகக் காலத்தில் வயிற்றில் வெயில் படுவது சிசுவிற்கு மிகவும் நல்லது. பிளவுஸ் மட்டும் உடல் சைஸிற்கு ஏற்றவாறு தைத்துக் கொள்ளலாம்.
• சுடிதார் தான் நகர பெண்களின் பேவரைட் சாய்ஸ். உங்கள் எடை கூடக் கூட உங்கள் உடல் அளவிற்கு ஏற்ற வகையில் சுடிதாரை தைத்துக் கொள்ளலாம். வேலைக்கு செல்லும் பெண்களும் விரும்புவது சுடிதாரை தான்.
• வெளியூர் பயணம் செய்யும்போது மேக்சி டிரஸ் பயன்படுத்திக்கொள்ளலாம். கடற்கரைகளில் வாக்கிங் செல்லும் போதும் நல்ல காற்றோற்றமாக இருக்கும்.
![]()
|
• கவுன் மாடல் டிரஸ்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இவை போட்டோ ஷூட் சமயத்தில் பயன்படுத்தலாம். மூட்டுக்கு கீழ்வரை நீளம் கொண்ட டிரஸ்கள் மிகவும் சவுகரியமாக இருக்கும்.
• இறுக்கமான ஜீன்சை கர்ப்பகாலத்தில் அணிய முடியாது. மேலும் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் பேண்ட் அணிவதை தவிர்ப்பது நல்லது. ஆனால் மிகவும் ஆசை படுவபவர்களுக்கு மெட்டர்னிட்டி ஜீன்ஸும் கிடைக்கின்றன.