எம்.பி.சி பிரிவில் 3ம் பாலினத்தவர்கள்: தமிழக அரசு

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (எம்.பி.சி) சேர்க்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த பி.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த
MBC, Transgender, TN Govt, எம்பிசி, மூன்றாம் பாலினத்தவர், இடஒதுக்கீடு, தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (எம்.பி.சி) சேர்க்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த பி.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கிய போதும், அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனவும், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு என சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டது போல, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news


இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட மூன்றாம் பாலினத்தவர் பட்டியலின மற்றும் பழங்குடியினராக இருந்தால் அந்த பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், பெண்ணாக கூறி சான்றிதழ் அளித்தால் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் வழங்கப்படும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவை சமர்ப்பித்தார். அரசு விளக்கத்தை ஏற்று நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Narayanan - Hyderabad,இந்தியா
29-ஜூன்-202220:52:54 IST Report Abuse
Arul Narayanan முற்பட்ட, பிற்பட்ட வகுப்பு திருநங்கையரை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கலாம். சரி. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும் தாழ்த்தப்பட்ட வகுப்பையும் சேர்ந்த திருநங்கையரை எதில் சேர்ப்பார்களாம்? இதைத் தெளிவு படுத்தாமல் எப்படி வழக்கை முடித்து வைக்கலாம்?
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
29-ஜூன்-202217:03:14 IST Report Abuse
David DS யாரை கேட்டு இப்படி சேர்த்தார்கள்
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
29-ஜூன்-202217:02:56 IST Report Abuse
David DS yaarai k|Ettu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X