மக்களை சந்திப்பதால் உற்சாகம்: முதல்வர் பெருமிதம்

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
திருப்பத்தூர்: மக்களை சந்திக்கும் போது ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: வரலாற்று சிறப்பு மிக்க இயற்கை எழில் உள்ள மாவட்டத்திற்கு வந்துள்ளது பெருமை அளிக்கிறது. இங்கு பல்வேறு திட்டங்களை நான் துவங்கி வைத்துள்ளேன். இதுவே கடந்த ஆட்சியாக
stalin, mkstalin, dmk, chiefminister,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பத்தூர்: மக்களை சந்திக்கும் போது ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: வரலாற்று சிறப்பு மிக்க இயற்கை எழில் உள்ள மாவட்டத்திற்கு வந்துள்ளது பெருமை அளிக்கிறது. இங்கு பல்வேறு திட்டங்களை நான் துவங்கி வைத்துள்ளேன். இதுவே கடந்த ஆட்சியாக இருந்திருந்தால் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒவ்வொரு விழா வைத்திருப்பார்கள். அப்படி விழா நடத்தினால் 365 நாட்களும் விழா நடத்த வேண்டி இருக்கும்.


டாக்டர் ஓய்வெடுக்க சொல்லியும் மக்களை சந்திப்பதில் உற்சாகம்

latest tamil news

விஷமங்கலம், கொல்லக்குப்பம், கொடுமாம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் பாம்பாற்றில் பாலம் அமைக்கபடும் .ஏலகிரி சாகச சுற்றுலாவுக்காக ரூ.2.98 கோடியில் சாகச சுற்றுலா துவங்கபடும். ஆண்டியப்பனூர் படகுகுழாம் மேம்படுத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கபடும். மேலும் ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி பல மேம்பாட்டு பணிகளும் செய்யவுள்ளோம்.


latest tamil news
ஆம்பூரில் உள்ள சுனை நீர் பகுதியிலும் சுற்றுலாதளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கபடும். ஏலகிரி அதிக அளவு மக்கள் வசிக்கும் பகுதி இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி 100 படுக்கை வசதிகளுடன் செயல்படும் நாட்றம்பள்ளியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கபடும். சமூக நீதி மாநில சுயாட்சி என்ற கருத்து ஒலிக்கிறது.

திமுக அரசு இந்தியாவுக்கே முன் மாதிரியாக திராவிட மாடல் ஆட்சியாக உள்ளது வி.பி.சிங்க் கொண்டு வந்த 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டோருக்கானதை நாங்கள் சட்டபோராட்டம் நடத்தி நிலை நிறுத்தியுள்ளோம். திமுக அரசு இந்தியாவுக்கே முன் மாதிரி அரசாக விளங்குகிறது


latest tamil news
லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், டாக்டர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்கள். ஆனால், இன்று புதிய உற்சாகத்திற்கு உங்களை சந்திக்க வந்துள்ளேன். மருந்து, மாத்திரைகளை விட மக்களை சந்திக்கும் போது உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படுகிறது. மக்களை சந்திக்கும் போது, ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை.

சில தாய்மார்கள் என் உடல்நிலை குறித்து கேட்டதால் உணர்வுப்பூர்வமாக உணர்கிறேன். மாவட்ட கலெக்டர் அலுவலகம் கம்பீரமாக உள்ளது. குறித்த காலத்திற்கு முன்பே பணிகள் முடிந்து திறந்து வைத்துள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
30-ஜூன்-202202:37:41 IST Report Abuse
BASKAR TETCHANA நீ கொடுக்கும் காசுக்கு வாழை ஆட்டி கொடு வரும் அல்லக்கைகள் உற்சாகமாகத்தான் இருப்பார்கள். ஆமாம் அந்த நேரு இருக்கிறானே அவன் போட்ட ரோட்டை திறந்து வைத்தாயா. போகும் பொது பார்த்தாயா உன் அருமை மந்திரி மோட்டார் சைலை நகர்த்தாமலை ரோடு போட்டான் பார் அதுவே உலக அதிசயம். அவனுக்கு உண்மையிலே அவார்ட் எதாவது கொடுக்கணும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
30-ஜூன்-202202:36:47 IST Report Abuse
M  Ramachandran யேமாற்று வித்தையில் கைய தேர்ந்த நீங்கள் மக்கல்லை நேரிடையாக சந்தித்து அவர்கள் ஏமா ள்ளிகள் தான் என்று மகிழ்ந்து இந்த கருத்தாய் உங்கள் நலவிரும்பி ஊடகங்களுக்கு கொடுத்துள்ளீர்கள்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
29-ஜூன்-202219:56:35 IST Report Abuse
Soumya மூர்க்க காட்டேரிகளால் வெட்டி கொடூரமாக கொல்லப்பட்ட அப்பாவி இந்து இளைஞனின் மரணத்துக்கு மட்டும் வாயில் பூட்டை போட்டுக்கொள்ளவ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X