சருமத்தை கூல் செய்யும் ஐஸ்கட்டிகள் !

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
சருமத்தின் மேல் ஐஸ்கட்டிகளை தடவுவது, அழகான சருமம் பெற செய்யும் எளிய வீட்டு வைத்தியம். வெப்பமான வானிலை மற்றும் அதிக வியர்வை காரணமாக முகம் பொலிவு இழந்து மிகவும் பாதிப்படைந்திருக்கும். அந்த சமயத்தில ஐஸ்கட்டிகளை நமது சருமத்தில் தேய்ப்பது பல வழிகளில் நன்மை தரும். உங்கள் சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க விரும்பினாலும் அல்லது அதிக நேரம் உங்கள் மேக்கப்பை உங்கள்
Lifestyle, Beauty, tips, icecubes, wrinkle, darkcircle, makeup, pimples, லைப்ஸ்டைல், பியூட்டி டிப்ஸ், பனிக்கட்டி, கருவளையம், முக சுறுக்கம்

சருமத்தின் மேல் ஐஸ்கட்டிகளை தடவுவது, அழகான சருமம் பெற செய்யும் எளிய வீட்டு வைத்தியம். வெப்பமான வானிலை மற்றும் அதிக வியர்வை காரணமாக முகம் பொலிவு இழந்து மிகவும் பாதிப்படைந்திருக்கும். அந்த சமயத்தில ஐஸ்கட்டிகளை நமது சருமத்தில் தேய்ப்பது பல வழிகளில் நன்மை தரும். உங்கள் சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க விரும்பினாலும் அல்லது அதிக நேரம் உங்கள் மேக்கப்பை உங்கள் சருமத்தில் ஒட்டிக்கொள்ள விரும்பினாலும், ஐஸ்கட்டி தான் கூல் சாய்ஸ் என கூறலாம்.

உங்களை அழகாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க உதவும். ஐஸ்கட்டியின் ஆறு சிறப்பு பயன்கள்.

1. முகப்பருவை குணப்படுத்தும்:


latest tamil news



ஐஸ்கட்டியின் சிறந்த பண்புகளில் ஒன்று அழற்சி எதிர்ப்பு ஆகும். இது முகப்பருவைக் குறைக்கவும் குணப்படுத்தவும் உதவுகிறது. முகப்பருவுக்கு முக்கிய காரணிகளை வரவிடாமல் செய்யும். காற்றாழை ஜெல் கொண்டு ஐஸ் கட்டிகளை உருவாக்கி தொடர்ந்து தேய்த்து வர பருக்கள் விரைவில் குறையும். தழும்புகளும் மறையும்.

2. சருமம் பளபளக்கும்:

நாம் அனைவரும் விருப்புவது பளபளப்பான மற்றும் பொலிவான சருமம். முகத்தில் ஐஸ் தடவினால் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முகம் பிரகாசமாக மாறும். மேலும் இது சருமத்தில் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தி முக பொலிவை அதிகரிக்கும்.

3 மேக்-அப்பிற்கு முன்:


latest tamil news



நீங்கள் உங்கள் மேக் அப் அதிக நேரம் முகத்தில் இருக்க வேண்டும் என எண்ணினால், மேக் அப் போடும் முன் கண்டிப்பாக ஐஸ் கட்டியை முகத்தில் தேய்க்க வேண்டும். நீண்ட நேரம் மேக்-அப் கலையாது என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்

4. கண் வீக்கத்தை குறைக்கும்:


latest tamil news



தூக்கமின்மை, சோர்வு காரணமாக கண்கள் கொஞ்சம் வீக்கத்துடன் காட்சியளிக்கும். ஐஸ் கட்டிகள் வீக்கங்களைக் குறைக்கும் குணம் கொண்டது. இதனால் கண்களுக்கு கீழ் காணப்படும் பைகள் விரைவில் மறைந்துவிடும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐஸ் கட்டியைப் பயன்படுத்துங்கள், உங்கள் அழகான கண்கள் மீண்டும் பிரகாசமாக மாறும். காபி தூளை சேர்த்து ஐஸ் கட்டி உருவாக்கி பயன்படுத்தினால் நல்ல பலன் தரும். ஸ்கர்ப்பர் போலவும் செயல்படும்.

5. கருவளையங்களை நீக்கும்:


latest tamil news



கண்களுக்குக் கீழே ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது கருவளையங்களுக்கு குட்-பைய் சொல்லும். சிறிது ரோஸ் வாட்டரை கொதிக்க வைத்து அதில் வெள்ளரி சாற்றை கலந்து அதன் மூலம் ஐஸ் கட்டி செய்து கொள்ளுங்கள். இந்த ஐஸ் கட்டியை உங்கள் கண்ணின் கீழ் பகுதியில் தடவவும். தொடர்ந்து செய்துவர கருவளையங்கள் விரைவில் நீங்கும்.

6. முக சுறுக்கத்தை போக்கும்:

வயதை கூட்டிச் சொல்லும் முகச் சுருக்கத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். ஐஸ் கட்டிகளை தோலில் தொடர்ந்து தேய்ப்பது தோல் முதிர்வை குறைக்கும். மேலும் இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தோல் துளைகளை இறுக்க செய்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X