சைக்கிள் ஓட்டுங்கள்.. வாழ்க்கைப்பாதை ஆரோக்கியமாகும்...!

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
சைக்கிள்... 80 மற்றும் 90களின் கதாநாயகன் இதுதான். சைக்கிள் வைத்திருப்பவர்கள் பலரும் 'கெத்'தாக வீதிகளில் உலா வருவது அப்போதைய பேஷன். ஆனால் நாகரிக வளர்ச்சி காரணமாக சிறிது சிறிதாக ஒதுக்கி வைக்கப்பட்ட சைக்கிள் கலாசாரம், தற்போது மீண்டும் தலைத்தூக்கத் துவங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒருபக்கமும், ஆரோக்கியம் மறுபக்கமும் என காரணமாக இருப்பதால் பலரும் சைக்கிளின்
சைக்கிள், சைக்கிளிங், சைக்கிள்ஓட்டுவதால், ஆரோக்கியக்குறிப்புகள், ஆரோக்கியம், ஹெல்த்திடிப்ஸ், ஹெல்த்தி, நீரிழிவு, உடல்எடைக்குறைய
cycling, benefitsofcycling, healthbenefits, health, benefits, cycle, healthtips, sugar, cyclingbenefits

சைக்கிள்... 80 மற்றும் 90களின் கதாநாயகன் இதுதான். சைக்கிள் வைத்திருப்பவர்கள் பலரும் 'கெத்'தாக வீதிகளில் உலா வருவது அப்போதைய பேஷன். ஆனால் நாகரிக வளர்ச்சி காரணமாக சிறிது சிறிதாக ஒதுக்கி வைக்கப்பட்ட சைக்கிள் கலாசாரம், தற்போது மீண்டும் தலைத்தூக்கத் துவங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒருபக்கமும், ஆரோக்கியம் மறுபக்கமும் என காரணமாக இருப்பதால் பலரும் சைக்கிளின் மீது பார்வையை திருப்பியுள்ளனர். சைக்கிள் ஓட்டுவது மனதுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமின்றி ஆரோக்கிய வாழ்வுக்கும் இன்றியமையாததாக உள்ளதுசுற்றுச்சூழலுக்கும் நல்லது. எனவே சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்...

சைக்கிள் ஓட்டும்போது, அனைத்து தசைகளும் பயன்பாட்டில் இருக்கும். இதனால் உடம்பிலுள்ள மூட்டுகளில் இறுகும் தன்மை மாறி, வலுவான மூட்டாக மாற்றுகிறது. கால் மற்றும் தொடைப்பகுதி தசைகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப்பகுதி போன்றவை வலிமையடைகிறது. இதனால் மூட்டுகளை நன்றாக நீட்டி, மடக்கி நடமாடுவது எளிதாகிறது.


latest tamil news



சைக்கிள் ஓட்டும் போது, நல்ல ஆரோக்கியமான ஆக்ஸிஜனை சுவாசிக்க முடிகிறது; இதயத்துடிப்பு சீராகிறது. இதயத்தசை நார்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், இதயம் தொடர்பான பல பிரச்சனைகள் வராமல் தவிர்க்கப்படுகிறது.

மூளையின் செயல்திறன் அதிகரிப்பதால் புத்துணர்ச்சி உண்டாகிறது. ரிலாக்ஸாக உணர்வதால் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

அதிக வியர்வை வெளிப்படுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறைகின்றன. எனவே உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.


latest tamil news



சைக்கிள் ஓட்டுவதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, டைப் 2 நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இது உதவுகிறது. ஒரு நாளில் 30 முதல் 60 நிமிடங்கள் வரை சைக்கிள் ஓட்டுவது, நீரிழிவு எதிர்ப்பு நன்மைகளை வழங்குவதற்கு போதுமானதாகும். அதிக எடை கொண்ட நீரிழிவு பிரச்னைக்கு உள்ளானவர்கள் ஒரு மணி நேரம் மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்ட வேண்டும்; இது அவர்களின் ரத்த சர்க்கரை அளவை 24 மணி நேரத்தில் குறைக்க உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன.

இதெல்லாம் கவனிக்கணும்...

எடுத்தவுடனேயே அதிக தூரத்துக்கு சைக்கிளை ஓட்டக்கூடாது. 15 நிமிடத்தில் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக சைக்கிள் ஓட்டும் வேகம், மற்றும் தூரத்தை அதிகரிக்க வேண்டும். வயது, மற்றும் உடல் நிலையை பொறுத்து சைக்கிள் ஓட்டும் நேரமும், வேகமும் இருக்க வேண்டும். மூட்டு வலி, அதிக உடல் எடை, இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X