கிரைண்டர், மின்மோட்டார், எல்இடி லைட் மீதான ஜிஎஸ்டி உயர்வு

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: கிரைண்டர், மின்மோட்டார், எல்இடி லைட் மீதான ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது.சண்டிகரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில்,கிரைண்டர், அரிசி அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி 5ல் இருந்து 18 சதவீதமாகவும்தண்ணீர்
கிரைண்டர், மின்மோட்டார், எல்இடி லைட் மீதான ஜிஎஸ்டி உயர்வு

புதுடில்லி: கிரைண்டர், மின்மோட்டார், எல்இடி லைட் மீதான ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது.

சண்டிகரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்,கிரைண்டர், அரிசி அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி 5ல் இருந்து 18 சதவீதமாகவும்

தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 1 8 சதவீதமாகவும்
எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி 12 ல் இருந்து 18 சதவீதமாகவும்

சூரிய சக்தி ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி 5 ல் இருந்து 12 சதவீதமாகடும்


latest tamil news


கத்தி, பேனா, பிளேடு , ஆகியவற்றிற்கான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாகவும்
மீத்தேன் மீதான ஜிஎஸ்டி 5ல் இருந்து 12 சதவீதமாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
29-ஜூன்-202220:04:54 IST Report Abuse
Sivagiri வீட்டு உபயோக பொருள்கள் , நுகர்வோர் உபயோக பொருள்கள் , தங்க நகை , TV,AC,வாஷிங் மெஷின் , சைக்கிள், கூரியர் , மெடிக்கல்ஸ் , பேப்பர் , இவர்கள் எல்லாம் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் GST- கணக்கு சரியாக அரசுக்கு போயி சேர்கிறதா என்பது மிகப் பெரிய டௌட்டுதான் , பாதி கூட சரியான கணக்கு கிடையாது , ரூ 20000-00 டிவிக்கு ரூ3600-00 GST- வருகிறது , அந்த பில் பக்கா பில் போலத்தான் தெரிகிறது , ஆனால் பெரிய டௌட்டுதான் , . . . வரிசையாக ஊருக்கு ஊர் கடைகள் திறந்து கொண்டே செல்வதை பார்த்தால் வசூலிக்கும் GST-யில்தான் மஞ்சள் குளிக்கிறார்கள் போல தெரிகிறது , . . . தயாரிப்பு கம்பெனியில் இருந்தே பாதி பில் போட்டு அனுப்புகிறார்கள் , . . . ஆக இவை அனைத்தும் மக்கள் பையில் இருந்து சுரண்டப்பட்டு , அரசுக்கு போகாமல் , தயாரிப்பாளர்-டீலர்-சில்லறை விற்பனையாளர் கூட்டணியில் பாதியிலேயே அவர்கள் பிரித்துக் கொள்கிறார்கள் . . . இதை சொன்னா நம்மை பைத்தியக்காரன் என்கிறார்கள் . . .
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
29-ஜூன்-202218:42:03 IST Report Abuse
சீனி நகரங்களில் பெருபாலும் அரைத்த மாவை பாக்கெட்டில் வாங்கிகொள்வார்கள். ஆனா கிரைண்டர் வாங்க முடியாத கணவன்களுக்கு கூடுதல் பணிச்சுமை தான். இதை வெச்சு திமுக அரைத்த மாவையே இன்னும் மூனு மாசம் ஆட்டுவார்கள், என்ன செங்கல் மாதிரி கிரைண்டரை தூக்கிக்காட்ட முடியாது, தாய்குலங்கல் இதையும் இலவசமா கொடுக்கிறாங்க என வராதா லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள் என்பது தான் உண்மை.... ஹாஹாஹா.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
29-ஜூன்-202218:30:41 IST Report Abuse
Vena Suna இவங்க போடற GST வரிகளை கடைக்காரன் அப்பாவி நுகர்வோரிடம் கட்ட சொல்றான்.கடைக்காரனுக்கு என்ன கவலை? நாம தான் இங்க அழுகிறோம்
Rate this:
29-ஜூன்-202220:15:46 IST Report Abuse
சின்னாளம்பட்டி சின்னவர் அதிகமாகவே வசூலிப்பதாக தொன்றுகிறது ஐந்து சதவீத வரிக்கு பனிரெண்டு சதவீதம் வசூலித்தல் என்ன செய்வது? எப்படி கண்டறிவது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X