சிவகங்கையில் ரூ.2.5 லட்சம் குட்கா பறிமுதல் : தனிப்படை ரெய்டு

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூருக்கு பெங்களூரூவில் இருந்து கண்டெய்னர் லாரியில் கடத்தி வந்த ரூ.2.5 லட்சம் குட்கா, கூல் லீப், மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரூ அருகே பன்னார்கட்டாவில் இருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லீப் போன்ற போதை வஸ்துகளை கடத்தி வந்து விற்பதாக ஐ.ஜி., அஸ்ராகர்கிற்கு புகார் சென்றது. அவரது உத்தரவுபடி ஐ.ஜி., தனிப்படை எஸ்.ஐ.,
சிவகங்கையில் ரூ.2.5 லட்சம் குட்கா பறிமுதல் : தனிப்படை ரெய்டு

சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூருக்கு பெங்களூரூவில் இருந்து கண்டெய்னர் லாரியில் கடத்தி வந்த ரூ.2.5 லட்சம் குட்கா, கூல் லீப், மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரூ அருகே பன்னார்கட்டாவில் இருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லீப் போன்ற போதை வஸ்துகளை கடத்தி வந்து விற்பதாக ஐ.ஜி., அஸ்ராகர்கிற்கு புகார் சென்றது. அவரது உத்தரவுபடி ஐ.ஜி., தனிப்படை எஸ்.ஐ., கணேஷ் பாபு தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூரூவில் இருந்து ஒக்கூர் வந்த கண்டெய்னர் லாரியை பின்தொடர்ந்து வந்தனர். ஒக்கூரில் தாஸ் சூப்பர் மார்க்கெட் அருகே போதை பொருட்களை இறக்க முயற்சித்த போது, போலீசார் கண்டெய்னர் லாரியில் ரெய்டு நடத்தினர். அந்த லாரியில் வீட்டு உபயோக பொருட்களுக்கு இடையே சாக்கு மூட்டையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லீப் மற்றும் வெளிநாட்டு மதுபாட்டில்கள் என ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ., காத்தமுத்து ஆகியோர் கண்டெய்னர் லாரி, இரண்டு காரினை பறிமுதல் செய்தனர். தாஸ் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ஒக்கூர் புதுார் ஆரோக்கியம் மகன் தேவதாஸ் 34, கண்டெய்னர் லாரி டிரைவர் பெங்களூரூ குட்டிக்காரையை சேர்ந்த அழகேசன் 26, லோடுமேன் ஒக்கூர் பிள்ளையார்கோவில் தெரு முருகப்பன் மகன் ராமநாதன் 21, ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். தப்பிச்சென்ற சிவகங்கை தென்றல்நகர் லட்சுமணன் மகன் தினேஷ் 27,யை தேடிவருகின்றனர். போலீசார் விசாரணையில் பெங்களூரூவில் இருந்து கண்டெய்னர் லாரியில் அடிக்கடி குட்கா, கூல் லீப் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்து ஒக்கூரில் உள்ள தாஸ் சூப்பர் மார்க்கெட் கோடவுனில் வைத்து, கார்களில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
30-ஜூன்-202202:42:41 IST Report Abuse
M  Ramachandran சென்ற ஆட்சியில் குட்கா புகழ் அமைச்சரையே குறைகூறி நீங்கள் அவரையெ அமைச்சராக்கி புளகாகிதமாகி யிருக்கிறீர்களெ?அப்ப உங்களுக்கு ஒட்டு போட்டவர்கள் ஏமாளிகள் என்று நினைக்கிறீர்கள்.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202200:32:44 IST Report Abuse
Fastrack செக்குலர் கும்பல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X