நெல்லை பதம் பார்க்கும் கால்நடைகள்| Dinamalar

நெல்லை பதம் பார்க்கும் கால்நடைகள்

Added : ஜூன் 29, 2022 | |
திருவாலங்காடு:அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட நெல்லை, கால்நடைகள் சாப்பிட்டு வருவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை ஊராட்சியில், கிராம சேவை மைய கட்டடத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.இங்கு, 1,400 நெல் மூட்டைகள் தேக்கி வைக்கும் அளவுக்கு குடோன் வசதி உள்ளது. இருந்தும்
நெல்லை பதம் பார்க்கும் கால்நடைகள்

திருவாலங்காடு:அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட நெல்லை, கால்நடைகள் சாப்பிட்டு வருவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை ஊராட்சியில், கிராம சேவை மைய கட்டடத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.இங்கு, 1,400 நெல் மூட்டைகள் தேக்கி வைக்கும் அளவுக்கு குடோன் வசதி உள்ளது. இருந்தும் விவசாயிகளிடம் இருந்து அதிகப்படியான நெல் மூட்டைகள் பெறப்பட்டு உள்ளதால், நெல் மூட்டைகள் வராண்டாவில் வைக்கப்பட்டு தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அந்த வழியாக பாகசாலை கிராமத்தில் இருந்து மேய்ச்சலுக்கு 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் சென்று வருகின்றன.அப்படி செல்லும் கால்நடைகள் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கொம்பால் குத்தி கிழித்தும், மூட்டைகளை தள்ளியும், சேதப்படுத்தியும், நெல்லை சாப்பிட்டு விட்டு செல்கின்றன.
இதனால் விவசாயிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து நெல்லை வாங்கி உள்ள அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.அதேபோன்று விவசாயிகள், ஒரு ஆண்டு உழைப்பில் விளைந்த நெல் வீணாவதாக புலம்புகின்றனர். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X