மின் கம்பம் அகற்றம்

Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
கடம்பத்துார்:நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, கடம்பத்துார் அரசு தொடக்கப் பள்ளி அருகே, எலும்புக்கூடான மின் கம்பத்தை மின் வாரியத்தினர் அகற்றினர்.கடம்பத்துார் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது அரசு தொடக்கப் பள்ளி. இந்த பள்ளியின் நுழைவு வாயில் அருகே உள்ள மின் கம்பம் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, எலும்புக்கூடாக இருந்தது. மேலும், மின் கம்பம் அருகில் உள்ள
மின் கம்பம் அகற்றம்

கடம்பத்துார்:நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, கடம்பத்துார் அரசு தொடக்கப் பள்ளி அருகே, எலும்புக்கூடான மின் கம்பத்தை மின் வாரியத்தினர் அகற்றினர்.
கடம்பத்துார் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது அரசு தொடக்கப் பள்ளி. இந்த பள்ளியின் நுழைவு வாயில் அருகே உள்ள மின் கம்பம் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, எலும்புக்கூடாக இருந்தது. மேலும், மின் கம்பம் அருகில் உள்ள விநாயகர் கோவில் சுவரில் சாய்ந்த நிலையில் இருந்தது.
இதுகுறித்து பொது மக்கள் அளித்த புகாரின்படி, கடம்பத்துார் மின்வாரிய ஊழியர்கள் எலும்புக்கூடான மின் கம்பம் அருகே புதிய மின் கம்பம் அமைத்தனர். ஆனால், மின் ஒயர்களை மாற்றி அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இது பள்ளிக்கும் வரும் மாணவர்கள் ஆபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு இருந்தது.இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, கடம்பத்துார் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக அமைக்கப்பட்டு மின் கம்பத்திற்கு மின் ஒயர்களை மாற்றி, எலும்புக்கூடான நிலையில் இருந்த மின் கம்பத்தை அகற்றினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X