இதே நாளில் அன்று

Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
ஜூன் 30, 1975 காஞ்சிபுரம் மாவட்டம் நாவலுாரில், வேதாசலம் - ஜானகி தம்பதிக்கு மகனாக, 1916 செப்டம்பர், 22ல் பிறந்தவர் கோவிந்தன். குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்ததால், சூளையில் உள்ள பள்ளியில், துவக்க கல்வியை முடித்தார். குடும்பச் சூழலால் தொடர்ந்து படிக்க இயலாமல், 'தமிழரசு, ஆனந்த விகடன்' இதழ்களின் அச்சகங்களில் அச்சுக் கோர்ப்பவராக பணியாற்றினார். அப்போது, தமிழ்


இதே நாளில் அன்று


ஜூன் 30, 1975



காஞ்சிபுரம் மாவட்டம் நாவலுாரில், வேதாசலம் - ஜானகி தம்பதிக்கு மகனாக, 1916 செப்டம்பர், 22ல் பிறந்தவர் கோவிந்தன். குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்ததால், சூளையில் உள்ள பள்ளியில், துவக்க கல்வியை முடித்தார். குடும்பச் சூழலால் தொடர்ந்து படிக்க இயலாமல், 'தமிழரசு, ஆனந்த விகடன்' இதழ்களின் அச்சகங்களில் அச்சுக் கோர்ப்பவராக பணியாற்றினார். அப்போது, தமிழ் இலக்கியங்களை படித்து எழுதும் ஆற்றலைப் பெற்றார்.
பின், 'கல்கி' இதழில் சேர்ந்து, 'விஜி' என்ற புனை பெயரில், 'பாப்பா மலர்' பகுதியில் தொடர்ந்து எழுதினார். 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி அவரை, 'விந்தன்' என்ற பெயரில் எழுதும்படி கூறினார். அதை ஏற்று, 'முல்லைக் கொடியாள்' என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் முதல் பரிசை பெற்றார்.
'பொன்னி' இதழில் தொடர் எழுதினார். ராஜாஜியின், 'பஜகோவிந்தம்' நுாலுக்கு மறுப்பாக, 'பசிகோவிந்தம்' நுாலை எழுதினார். வாழப்பிறந்தவன், அன்பு, கூண்டுக்கிளி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனமும் எழுதினார். விந்தன், 1975ல், இதே நாளில், தன், ௫௯வது வயதில் காலமானார். அவரின் நுால்கள்
நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.ஏழை வாழ்வை எழுதி, ஏழ்மையில் மடிந்த விந்தை எழுத்தாளனின் நினைவு தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X