பீஹாரில் ஓவைசி கட்சி 4 எம்.எல்.ஏ.க்கள் லாலு கட்சிக்கு ஒட்டம்| Dinamalar

பீஹாரில் ஓவைசி கட்சி 4 எம்.எல்.ஏ.க்கள் லாலு கட்சிக்கு ஒட்டம்

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (3) | |
பாட்டா: பீஹாரில் ஓவைசி கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் இன்று லாலு பிரசத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் ஐக்கியமாயினர்.ஆந்திராவில் செல்வாக்குமிக்க கட்சியாக ஏ.ஐ.எம்.ஐ.எம். எனப்படும் அகில இந்திய மஜ்லிஸ் - ஏ- இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி உள்ளது. இதன் தலைவராக அசாதுதீன் ஓவைசி உள்ளார். பீஹார் சட்டசபைக்கு 2020ல் நடந்த தேர்தலில் இக்கட்சிக்கு 5 எம்.எல்.ஏ.க்கள்
4 MLAs from Owaisi's AIMIM in Bihar set to join Lalu Prasad Yadav's RJD

பாட்டா: பீஹாரில் ஓவைசி கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் இன்று லாலு பிரசத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் ஐக்கியமாயினர்.
ஆந்திராவில் செல்வாக்குமிக்க கட்சியாக ஏ.ஐ.எம்.ஐ.எம். எனப்படும் அகில இந்திய மஜ்லிஸ் - ஏ- இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி உள்ளது. இதன் தலைவராக அசாதுதீன் ஓவைசி உள்ளார். பீஹார் சட்டசபைக்கு 2020ல் நடந்த தேர்தலில் இக்கட்சிக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


latest tamil newsஇந்நிலையில் இக்கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் இன்று அக்கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜாஸ்வி யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதன் மூலம் பீஹார் சட்டசபையில் 76 இடங்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் பலம் 80 ஆக உயர்ந்துள்ளதாகவும், ஒவைசி கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X