சென்னை, :கடந்த மாதம், பிரதமர் மோடி திறந்த 'லைட் ஹவுஸ்' திட்ட குடியிருப்புகளில் உள்ள நுாலகம், பாலகம், அங்கன்வாடி கட்டடங்கள், அந்தந்த துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.பெரும்பாக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில், மத்திய அரசின் 'லைட் ஹவுட்' திட்டத்தில், 116 கோடி ரூபாயில் 1,152 வீடுகள் கட்டப்பட்டன.ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடியில், ஒவ்வொரு வீடும், 400 சதுர அடி பரப்பு கொண்டது. கடந்த மாதம் 26ம் தேதி, பிரதமர் மோடி இந்த 'லைட் ஹவுஸ்' குடியிருப்பை திறந்து வைத்தார்.இதை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.அதே வளாகத்தில் நுாலகம், ஆவின் பாலகம் மற்றும் குழந்தைகள் மைய கட்டடம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன. அவை, அந்தந்த துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.குடியிருப்பு முழுதும் பயனாளிகள் நிரம்பியதும் நுாலகம், பாலகம், குழந்தைகள் மையத்தை திறக்க, அந்தந்த துறையினர் முடிவு செய்துள்ளனர்.