புத்திமதி கூற வந்த உறவினர்களை எரித்த வாலிபர்; ஒருவர் பலி

Added : ஜூன் 29, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
யாத்கிர் : புத்திமதி கூற வந்த மனைவியின் உறவினர்களை அறையில் அடைத்த நபர், பெட்ரோல் ஊற்றி எரித்ததில், ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கர்நாடக மாநிலம் யாத்கிர் ஹுனசகியின், நாராயணபுரா சாயா காலனியில் வசிப்பவர் சரணப்பா, 32. இவரது மனைவி ஹுலிகம்மா, 26; இவர், ராய்ச்சூர் லிங்கசூகூரின், கே.எஸ்.ஆர்.டி.சி., டிப்போவில், மெக்கானிக்காக பணியாற்றுகிறார்.தம்பதிக்குள்
புத்திமதி கூற வந்த உறவினர்களை எரித்த வாலிபர்; ஒருவர் பலி

யாத்கிர் : புத்திமதி கூற வந்த மனைவியின் உறவினர்களை அறையில் அடைத்த நபர், பெட்ரோல் ஊற்றி எரித்ததில், ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் யாத்கிர் ஹுனசகியின், நாராயணபுரா சாயா காலனியில் வசிப்பவர் சரணப்பா, 32. இவரது மனைவி ஹுலிகம்மா, 26; இவர், ராய்ச்சூர் லிங்கசூகூரின், கே.எஸ்.ஆர்.டி.சி., டிப்போவில், மெக்கானிக்காக பணியாற்றுகிறார்.தம்பதிக்குள் ஒத்து போகாமல், அவ்வப்போது சண்டை போட்டனர். கணவர் மீதான கோபத்தில், 14 மாதங்களுக்கு முன், வேறு வீட்டில் மனைவி வசிக்க துவங்கினார்.

இதனால் விவாகரத்து செய்ய கணவர் முடிவு செய்தார். ஆனால், மனைவி விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை. இதனால், கணவர் கோபமடைந்தார்.இந்நிலையில் சரணப்பாவுக்கு அறிவுரை கூறும் நோக்கில், ஹுலிகம்மாவின் தந்தை சித்தராமப்பா முராளா, 62, மூன்று உறவினர்களுடன், நேற்று காலை 11:00 மணியளவில், நாராயணபுராவின் சாயா காலனியில் உள்ள சரணப்பாவின் வீட்டுக்கு சென்றார்.

வீட்டின் மாடியறையில் சமாதான பேச்சு நடந்தது. அப்போது சரணப்பா, தன் தரப்பில் பேச பெரியவர்களை அழைத்து வருவதாக கூறி, அறையில் நால்வரையும் அடைத்து வைத்தார். ஜன்னல் வழியாக அவர்கள் மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், தீக்காயங்களுடன் துடித்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவத்தில், நாகப்பா ஹகரகுன்டா, 35 என்பவர் உயிரிழந்தார். சித்தராமப்பா முராளா, முத்தப்பா முராளா, நாகப்பா சரூரா ஆகிய மூவர், படுகாயங்களுடன் சிகிச்சை பெறுகின்றனர். நாராயணபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
30-ஜூன்-202211:25:11 IST Report Abuse
raja பதினாலு மாசமா வேற ஊட்டுல வாழற பொம்பளை எதுக்கு விவாகரத்துக்கு சம்மதிக்கலை... கணவர் செய்தது சரிதான்.....
Rate this:
Cancel
30-ஜூன்-202208:04:58 IST Report Abuse
சின்னாளம்பட்டி சின்னவர் நிதானம் தவறும் இது போன்ற நிகழ்வுகள் மூர்க்க மதத்தினர் மூலமாக எல்லாருக்கும் பரவி வருது
Rate this:
Cancel
30-ஜூன்-202207:12:44 IST Report Abuse
அப்புசாமி இந்த புருஷ சிகாமணிக்கு விவாகரத்து குடுக்க மாட்டீங்களாக்கும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X