குளம், குட்டையில் தேங்கிய மண் அள்ளுவதால் கூடுதல் நீர் தேக்கலாம்! திருமூர்த்தி அணையிலும் வண்டல் எடுக்க அனுமதி

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
உடுமலை,-உடுமலை பகுதியிலுள்ள குளங்களில், 85 விவசாயிகள் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு, பணி துவங்கியுள்ளது. திருமூர்த்தி அணையிலும் மண் எடுக்க அனுமதிக்கப்படுவதால், விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும், நீர் நிலைகளை துார்வாரி கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும், திருப்பூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும்
குளம், குட்டையில் தேங்கிய மண் அள்ளுவதால் கூடுதல் நீர் தேக்கலாம்!   திருமூர்த்தி அணையிலும் வண்டல் எடுக்க அனுமதி

உடுமலை,-உடுமலை பகுதியிலுள்ள குளங்களில், 85 விவசாயிகள் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு, பணி துவங்கியுள்ளது. திருமூர்த்தி அணையிலும் மண் எடுக்க அனுமதிக்கப்படுவதால், விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும், நீர் நிலைகளை துார்வாரி கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும், திருப்பூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, நீர் நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண், மண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள, கடந்த, மே மாதம், 5ம் தேதி, மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உடுமலை தாலுகாவில், விருகல்பட்டியிலுள்ள, பழையூர் குட்டையில், 53.4 ஹெக்டேர் பரப்பளவில், 1,620 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதே போல், வாகத்தொழுவு, ஜக்கமநாயக்கன்பாளையம் குட்டையில், 18.49 ஹெக்டேர் பரப்பளவில், 1,527 கன மீட்டர், பொன்னேரி குட்டையில், 7.31 ஹெக்டேர் பரப்பளவில், 604 கன மீட்டர், இலுப்பநகரம், ஆலாமரத்துார் குட்டை, 5.95 ஹெக்டேர் பரப்பளவில், 491 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.

வடுகபாளையம், சுங்காரமுடக்கு குட்டை, 5.21 ஹெக்டேர் பரப்பளவில், 430 கன மீட்டர், அந்தியூர் குட்டையில், 9.71 ஹெக்டேர் பரப்பளவில், 802 கன மீட்டர், கணபதிபாளையம் கிராமத்தில், கரையான் குட்டையில், 8.25 ஹெக்டேர் பரப்பளவில், 681 கன மீட்டரும், கருப்பராயன் கோவில் குளத்தில், 6.91 ஹெக்டேர் பரப்பளவில், 571 கன மீட்டர் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.மேலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, சின்ன வாளவாடி, பெரிய குளத்தில், 472.320 ஹெக்டேர் பரப்பளவில், 25 ஆயிரத்து, 620 கன மீட்டர் மண் எடுக்க என, உடுமலை தாலுகாவில், 9 குளம், குட்டைகளில், 30 ஆயிரத்து, 742 கன மீட்டர் மண்ணை விவசாயிகள் எடுத்துக்கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.


மண் எடுக்க விதிமுறைகள்
மண் எடுக்கும் விவசாயிகளுக்கு வேளாண் நிலம், துார்வாரப்படும் குளம் அமைந்துள்ள அதே வருவாய் கிராமம் அல்லது அருகிலுள்ள கிராமத்தில் அமைந்திருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; நஞ்சை நிலமாக இருந்தால், இரு ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ஏக்கருக்கு, 75 கன மீட்டர் அல்லது 75 டிராக்டர் லோடு வழங்கப்படும்.புஞ்சை நிலமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு, 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடு வழங்கப்படும், உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் சான்றுடன், வேளாண்துறை பரிந்துரையுடன் விண்ணப்பித்த, 85 விவசாயிகளுக்கு, மாவட்ட கனிம வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதில், ஆலாமரத்துார் குட்டையில், மண் எடுத்து விளை நிலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள, 14 விவசாயிகளுக்கும், விருகல்பட்டி குட்டையில் மண் எடுத்துக்கொள்ள, ஒரு விவசாயிக்கும் அனுமதி வழங்கப்பட்டு, விவசாயிகள் மண் எடுத்து வருகின்றனர்.தொடர்ந்து, பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, உடனடியாக அனுமதி வழங்கப்படும். எனவே, அறிவிக்கப்பட்டுள்ள குளம், குட்டைகளில் மண் எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


திருமூர்த்திக்கும் அனுமதி
பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் ஒன்றான, திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில், 300 ஏக்கர் பரப்பளவு மண் மேடாக உள்ளது. இந்த மண் அகற்றி ஆழப்படுத்த வேண்டும்.இதனால், கூடுதலாக, ஒன்றரை டி.எம்.சி., நீர் தேக்க முடிவதோடு, பி.ஏ.பி., திட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.கடந்த, 2017ம் ஆண்டு, சர்வே எண் 252, 253ல், 50 ஆயிரத்து, 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது. அப்போது, 36 ஆயிரம் கன அடி மண் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், மழை துவங்கியது, பாசனம் ஆகிய காரணங்களினால் நிறுத்தப்பட்டது.அந்த ஆண்டே, சர்வே எண், 254ல், 34 ஆயிரம் கன மீட்டர் எடுக்க அனுமதியளித்து, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டு குளம், குட்டைகளில் மண் எடுக்க அனுமதி அளிக்கும் அரசு ஆணையில், திருமூர்த்தி அணை விடுபட்டது.இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள், திருமூர்த்தி அணையிலும் வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், நடப்பாண்டு திருமூர்த்தி அணையில், 34 ஆயிரத்து, 100 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்க விருப்பம் உள்ள விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X