எக்ஸ்குளுசிவ் செய்தி

அ.தி.மு.க., பொன்விழா ஆண்டில் இரட்டை இலை சின்னம் முடக்கம்?

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை :அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையில் ஏற்பட்ட மோதலால், கட்சி பொன்விழா ஆண்டில், உள்ளாட்சி இடைத் தேர்தலில், அ.தி.மு.க.,வினர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள 510 உள்ளாட்சி பதவிகளுக்கு, அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஊராட்சி கவுன்சிலர் நிலையில் கட்சி ரீதியான போட்டி கிடையாது.
முடக்கம்?

சென்னை :அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையில் ஏற்பட்ட மோதலால், கட்சி பொன்விழா ஆண்டில், உள்ளாட்சி இடைத் தேர்தலில், அ.தி.மு.க.,வினர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் காலியாக உள்ள 510 உள்ளாட்சி பதவிகளுக்கு, அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஊராட்சி கவுன்சிலர் நிலையில் கட்சி ரீதியான போட்டி கிடையாது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் 12; ஊரக உள்ளாட்சிகளில் 22 பதவிகள் என, 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்வு நடக்கும்.இதற்கான வேட்பு மனு தாக்கல், 27ம் தேதி நிறைவடைந்தது. நேற்று மனுக்கள் பரிசீலனை நடந்தது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் மனு தாக்கல்
செய்துள்ளனர்.

அவர்கள் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் என்பதற்கான படிவத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டு வழங்க வேண்டும்.
தற்போது, அ.தி.மு.க., தலைமை பதவிக்கு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இடையே குடுமிப்பிடி சண்டை நடந்து வருகிறது.
இதனால், அதிகாரபூர்வ வேட்பாளர் படிவம் வழங்கப்படவில்லை. வேறு வழியின்றி, அ.தி.மு.க.,வினர் சுயேச்சையாக களம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்சியில் பிளவு ஏற்படும்போது, தேர்தல் கமிஷன் கட்சி சின்னத்தை முடக்கும்.

அப்போது, கட்சி வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்படும்.தற்போது தேர்தல் கமிஷன் சின்னத்தை முடக்கவில்லை; கட்சி நிர்வாகிகளே சின்னம் முடக்கத்திற்கு காரணமாகி விட்டதால், அ.தி.மு.க., வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலை
ஏற்பட்டுள்ளது.இன்று மனு தாக்கல் வாபஸ் பெற கடைசி நாள். இன்று மாலை 3:00 மணிக்கு மேல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். அப்போது, அங்கீகார கடிதம் கொடுத்தால் கூட சின்னம் ஒதுக்கப்படும். ஆனால் அதற்கு
வாய்ப்பில்லை.கட்சி பொன்விழா ஆண்டில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாதது, கட்சி தொண்டர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, 'அ.தி.மு.க., வேட்பாளர் படிவங்களை கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வையுங்கள்' என, பன்னீர்செல்வம் நேற்று இரவு பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar - nandhivaram,இந்தியா
30-ஜூன்-202213:45:29 IST Report Abuse
kumar அ தி மு க கட்சியை ஆரம்பித்து மூன்று முறை ஆட்சியை பிடித்த ஒரே நடிகர் எம் ஜி ஆர் மட்டுமே. வேறு எந்த நடிகராலும் முடியாததை நாடறியும். அந்த கட்சியை இப்பவுள்ள நோகாம நோன்பு கும்பிடும் பன்னீர்செல்வம் - பழனிசாமி போன்ற ஒன்றுக்கும் உதவாக்கரைகளை ஒழித்து கட்ட மக்கள் தான் முடிவு பன்னனும்.
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
30-ஜூன்-202211:34:40 IST Report Abuse
veeramani பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் துவங்கிய அதிமுக கட்சியின் அதிகார சின்னம் இறட்டையிலை முடக்குவது அன்றைய தொண்டர்களின் மனது வலிக்கிறது. பொன்விழா ஆண்டில் இது போன்ற நிகழ்வு வருத்தம் . எம் ஜி ஆர் தொண்டர்களின் ஆசை. இருவரும் ஒருவர் அனால் தன என்ன. கட்சிக்காக தேனிக்காரர் தியாகம் செய்யலாமே ??
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
30-ஜூன்-202211:11:46 IST Report Abuse
J. G. Muthuraj இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் நீங்கள் சின்னாபின்னம் ஆகிவிடுவீர்கள்.....
Rate this:
Namasivayam Ganesan - MADURAI,இந்தியா
30-ஜூன்-202218:02:14 IST Report Abuse
Namasivayam Ganesanஇரட்டை இல்லை இருந்தப்ப தான் தொடர்ந்து பாராளுமன்றம், சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவி உள்ளது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X