பள்ளியில் தக்காளி காய்ச்சல்

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அந்நோயினால் ஒரே பள்ளியைச் சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் மழைக்கால தொற்று நோய்களான டெங்கு, எலி காய்ச்சலுடன், கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை, கருணாபுரம் ஆகிய ஊராட்சிகளில் கூடுதலாக தக்காளி காய்ச்சலும் விரைந்து பரவி

மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அந்நோயினால் ஒரே பள்ளியைச் சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் மழைக்கால தொற்று நோய்களான டெங்கு, எலி காய்ச்சலுடன், கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை, கருணாபுரம் ஆகிய ஊராட்சிகளில் கூடுதலாக தக்காளி காய்ச்சலும் விரைந்து பரவி வருகிறது.நெடுங்கண்டம் அருகே கல்லாறு அரசு துவக்கப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் காய்ச்சல் மற்றும் உடலில் அரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.
அதனை பார்த்த தலைமை ஆசிரியர் பட்டம், காலனியில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் அளித்தார். அங்குள்ள மருத்துவ குழு பள்ளிக்குச் சென்று மாணவர்களை பரிசோதித்தது. இதில் எல்.கே.ஜி. படிக்கும் 14 பேர், யூ.கே.ஜி. படிக்கும் 6 பேர் என 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் உறுதியானது.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளதாக மருத்துவ அதிகாரி பிரசாத் தெரிவித்தார்.தக்காளி காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளியில் மூன்று வகுப்புகளை மூன்று நாட்களுக்கு மூடுமாறு சுகாதார துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X