மருந்துக்காக கடத்தப்படும் எறும்புத்தின்னி: அழிவை தடுக்க ஆர்வலர்கள் முயற்சி

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
மருந்து தயாரிப்புக்காக கடத்தப்படுவதால், அரிய வகை எறும்புத்தின்னிகள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளதாக, வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.வன உயிரின பாதுகாப்பில் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், முள் எலி, எறும்புத்தின்னி போன்ற உயிரினங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இதனால், சிறு விலங்குகள் குறித்த விழிப்புணர்வு
மருந்துக்காக கடத்தப்படும் எறும்புத்தின்னி: அழிவை தடுக்க ஆர்வலர்கள் முயற்சி

மருந்து தயாரிப்புக்காக கடத்தப்படுவதால், அரிய வகை எறும்புத்தின்னிகள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளதாக, வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.வன உயிரின பாதுகாப்பில் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், முள் எலி, எறும்புத்தின்னி போன்ற உயிரினங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இதனால், சிறு விலங்குகள் குறித்த விழிப்புணர்வு வெகுவாக குறைந்துள்ளது.

விழிப்புணர்வு

மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததை பயன்படுத்தி, சிலர் எறும்புத்தின்னி உள்ளிட்ட சிறு விலங்குகளை வேட்டையாடுவது, கடத்துவதில் ஈடுபடுகின்றனர். வன உயிரின ஆர்வலர்களில் ஒரு பிரிவினர், தற்போது, சிறு விலங்குகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தைதீவிரப்படுத்தி உள்ளனர்.இது குறித்து, வன உயிரின ஆராய்ச்சியாளர் பிரவீன்குமார் கூறியதாவது:அலங்குகள் எனப்படும் எறும்புத்தின்னிகள் வறண்ட புதர்கள் போன்ற பகுதிகளில் பரவலாக காணப்படும். எறும்புகள், கரையான், ஈசல்கள் ஆகியவற்றை உண்ணும் அலங்குகள், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமாக பட்டியலிடப்பட்டுள்ளது.கூர்மையான முகம், நீண்ட வால் மற்றும் செதில்களுடன் உடல் என்ற அமைப்பில் எறும்புத்தின்னிகள் காணப்படும். தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில், எவ்வளவு எறும்புத்தின்னிகள் உள்ளன என்பது குறித்த புள்ளிவிபரங்கள் முழுமையாக இல்லை.

வேட்டை
இருப்பினும், சீன மருத்துவத்தில் குறிப்பிட்ட வகை மருந்து தயாரிப்புக்காக, எறும்புத் தின்னிகளின் செதில்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்காக, அவை வேட்டையாடப் படுகின்றன.மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே, இதை தடுக்க முடியும். எனவே, ஏற்காடு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம், எறும்புத் தின்னிகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, பல்வேறு கலந்துரையாடல்கள், போட்டிகள் நடத்தப்பட்டன.
பள்ளி கல்வித் துறை, வனத் துறை ஒத்துழைப்புடன், இந்த பிரசார பணிகள் மேற்கொள்ளப் பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அழிவின் விளிம்பில் உள்ள எறும்புத்தின்னிகள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வேட்டையாடுவோர், கடத்துவோருக்கு கடுமையான தண்டனை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X