குற்றவாளிகளுக்கு 'காப்பு' :கர்நாடக ஐகோர்ட் தடை

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பெங்களூரு :'தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை தவிர, குற்றவாளிகளை கைது செய்யும் போது அவர்கள் கைகளில் விலங்கு மாட்டக் கூடாது' என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள அங்களி பகுதியை சேர்ந்தவர் சுப்ரீத் ஈஷ்வர் திவேட்டி. சட்ட கல்லுாரியில் படித்து வந்த இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட 'செக்' மோசடி வழக்குகள் இருந்தன.
குற்றவாளிகள் .காப்பு , கர்நாடக ஐகோர்ட் தடை

பெங்களூரு :'தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை தவிர, குற்றவாளிகளை கைது செய்யும் போது அவர்கள் கைகளில் விலங்கு மாட்டக் கூடாது' என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள அங்களி பகுதியை சேர்ந்தவர் சுப்ரீத் ஈஷ்வர் திவேட்டி. சட்ட கல்லுாரியில் படித்து வந்த இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட 'செக்' மோசடி வழக்குகள் இருந்தன.


'வாரன்ட்'



latest tamil news



இதில் ஒன்றில் அவர் மீது, ஜாமினில் வெளிவர முடியாத, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், சமீபத்தில் தேர்வு எழுதி விட்டு நடந்து வந்த சுப்ரீத்தை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், இவரது கைகளில் விலங்கு மாட்டி, பரபரப்பான சாலையில் நடத்தி அழைத்து சென்றனர்.இதையடுத்து, கர்நாடக
உயர் நீதிமன்றத்தின் தர்வாத் கிளையில், சுப்ரீத் தாக்கல் செய்த மனுவில், 'நான் கிரிமினல் குற்றவாளியில்லை. செக் மோசடி வழக்கில் என்னை கைது செய்த போலீசார், என் கைகளில் விலங்கு மாட்டி, பலர் பார்க்கும்படி நடத்தி அழைத்துச் சென்றனர்.
'இதனால், என் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டு உள்ளது. இதற்காக, எனக்கு, ௨௫ லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்' என, கூறியிருந்தார்.


இழப்பீடு



இது பற்றி விசாரித்த நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் உத்தரவிட்டதாவது:தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே, குற்றவாளிகளை கைது செய்யும் போது, அவர்களுக்கு விலங்கு மாட்ட வேண்டும்.
குற்றவாளிகளுக்கு விலங்கு மாட்டினால், அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.விசாரணை கைதிகளுக்கு விலங்கு மாட்ட வேண்டும் என்றால், அதற்கு விசாரணை
நீதிமன்றத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ததில் தவறில்லை. ஆனால், விலங்கு மாட்டியது தான் தவறு. அதனால், மனுதாரருக்கு
இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202206:24:16 IST Report Abuse
Kasimani Baskaran குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரையும் நிரபராதி போலவே நடத்தவேண்டும் என்றுதான் சட்டம் சொல்கிறது.
Rate this:
Cancel
30-ஜூன்-202206:11:22 IST Report Abuse
அப்புசாமி 5 செக்குகளில் கையெழுத்துப் போட்டு ஏமாத்தியிருக்கான். இனிமே அது மாதிரி செய்யக்கூடாதுன்னு அவனுக்கு ஞாபகப் படுத்தத்தான் கை விலங்கு. பரபரபான வீதிகளில் நடத்திச் சென்றால்தான் நாலு பேருக்கு இவன் பவிஷு தெரிஞ்சு யாரும் இவன் கிட்டேயிருந்து செக் வாங்க மாட்டாங்க யுவர் ஆனர். என்னவோ இவன் மானஸ்தனாம். கவுரவுத்துக்கு இழுக்கு வந்திருச்சாம். நல்லா வருவீங்க யுவர் ஆனர். அவனுக்கு புதுசா ஒரு செக் புக் பார்சேல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X