பாதுகாப்பு வழக்கு: நீதிமன்ற உத்தரவுக்கு தடை

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி-ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், திரிபுரா உயர் நீதிமன்றம் பிறப்பித்தஉத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மஹாராஷ்டிர அரசின் பரிந்துரைப்படி முகேஷ் அம்பானி மற்றும் அவர் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதை எதிர்த்து, பிகாஷ் சாஹா என்பவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், திரிபுரா உயர் நீதிமன்றம் பிறப்பித்தஉத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.



latest tamil news



மஹாராஷ்டிர அரசின் பரிந்துரைப்படி முகேஷ் அம்பானி மற்றும் அவர் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதை எதிர்த்து, பிகாஷ் சாஹா என்பவர் திரிபுரா உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த திரிபுரா உயர் நீதிமன்றம், அம்பானி குடும்பத்திற்கு உள்ள அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை, மத்திய அரசு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த வழக்கு தொடர்பாக முந்தைய நாள் திரிபுரா உயர் நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்ததா' என, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் அமர்வு கேட்டது.


latest tamil news


அதற்கு, 'திரிபுரா உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கவில்லை' என, துஷார் மேத்தா கூறினார்.இதையடுத்து திரிபுரா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், பிகாஷ் சாஹாவுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப அமர்வு உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202206:32:49 IST Report Abuse
Kasimani Baskaran உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் முறணான செயல்பாடுகள் மூலம் பொதுமக்களிடன் தங்களது மரியாதையை இழக்க ஆரம்பித்து இருக்கின்றன. இதை உச்சநீதிமன்றம் சரி செய்யவில்லை என்றால் நாட்டுக்கே தலைகுனிவாகும் அளவில் இவர்கள் செயல்பட வாய்ப்பு இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X