'என் சக்தியை மீறி உழைக்கிறேன்!'

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
திருப்பத்துார்:''என் சக்தியை மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன்,'' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.திருப்பத்துாரில் நேற்று, புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு, ஆறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நடந்தன. முதல்வர் ஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வேலு, திருப்பத்துார் மாவட்டத்தில்
'என் சக்தியை மீறி உழைக்கிறேன்!'

திருப்பத்துார்:''என் சக்தியை மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன்,'' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருப்பத்துாரில் நேற்று, புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு, ஆறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நடந்தன. முதல்வர் ஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வேலு, திருப்பத்துார் மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக இருந்து, தன் சொந்த மாவட்டத்தைப் போல பார்த்துக் கொள்கிறார். அதனால் தான், திருப்பத்துார் இப்போது புதிதாக மாறிக் கொண்டிருக்கிறது.
மாநிலத்தின் முதல்வர் என்பதால், மாவட்டங்களை நான் மறந்து விடவில்லை. மாவட்டங்களுக்கு போதுமான திட்டங்களை அறிவித்தாலும், ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்றியாக வேண்டும்.அதற்காகத் தான் அனைவரிடமும் மனுக்கள் பெற்று, நிறைவேற்றி வருகிறேன். அதனால் தான், தி.மு.க., அரசு 'திராவிட மாடல்' ஆட்சியாக உள்ளது.
இதிலிருந்து மாறாமல் நடந்தால், ஐந்தாண்டு காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழகம் பெறும். இதற்காகத் தான், உடல் சோர்வை பற்றிக்கூட கவலைப்படாமல், என் சக்தியை மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன்.நான் மட்டுமல்ல; அனைத்து அமைச்சர்களும் அப்படித் தான் செயல்பட்டு வருகின்றனர்.

முதல்வர் பொறுப்பில் இருக்கிற நானும், ஒரு இளநிலைப் பொறுப்பிலுள்ள அலுவலரும் ஒரே மாதிரியான நோக்கத்தில் செயல்பட்டால், இந்த ஆட்சி சிறப்பாக விளங்கும். இந்தியாவுக்கே முன் மாதிரியான ஆட்சியாக மலரச் செய்வோம். இவ்வாறு, அவர் பேசினார்.அமைச்சர்கள் வேலு, துரைமுருகன், காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஒருவரும் 'மாஸ்க்' அணியவில்லை.

:

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
30-ஜூன்-202221:11:05 IST Report Abuse
jagan என்ன சக்தி? அறிவு சக்தியா? நிசம் தானுங்கோ
Rate this:
Cancel
C G MAGESH - CHENNAI,இந்தியா
30-ஜூன்-202214:08:57 IST Report Abuse
C G MAGESH தகுதிக்கு மீறிய பதவி கிடைச்சா அப்படி தான்.
Rate this:
Cancel
vigneshh - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூன்-202213:47:01 IST Report Abuse
vigneshh சரிதான், ஊழைக்கிறது நாட்டு மக்ககுலுக்கு அல்ல, சொந்த மக்களுக்கும் தீய மூ கா மினிஸ்டர். மகனையும் மருமகனையும் நிலக்கு நிறுத்த வேண்டும் இல்லேன்னா ரொம்ப ரொம்ப நாறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X