'மாஜி' மந்திரி மீதான வழக்கில் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல்

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
சென்னை:வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு எதிரான வழக்கில், விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தாலுகாவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு:பாலக்கோடு சட்டசபை தொகுதியில் இருந்து, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2016 - 21ம்

சென்னை:வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு எதிரான வழக்கில், விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தாலுகாவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு:பாலக்கோடு சட்டசபை தொகுதியில் இருந்து, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2016 - 21ம் ஆண்டில் உயர் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர் அன்பழகன்; குடும்பத்தினர், உறவினர்கள் பெயரில், ஏராளமான சொத்துக்களை வாங்கி உள்ளார்.


சொத்தின் மதிப்பு, 600 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.ஊழல் நடவடிக்கைகள் வாயிலாக, இந்த அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார். அதிகார துஷ்பிரயோகம் செய்து, சொத்து சேர்த்தது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கக் கோரி, மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து, வழக்கு தொடர்ந்தேன்.


மனு நிலுவையில் இருக்கும் போது, அன்பழகன், அவரது மனைவி மல்லிகா மற்றும் மகன்கள், மருமகளுக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. 2022 ஜனவரியில் வழக்குப் பதிவு செய்தும், இதுவரை புலனாய்வு நடத்தவில்லை.எனவே, விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனு, நீதிபதி சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆஜரானார். எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X