தேர்தல் கமிஷனில் பழனிசாமி பதில் மனு| Dinamalar

தேர்தல் கமிஷனில் பழனிசாமி பதில் மனு

Added : ஜூன் 30, 2022 | |
சென்னை:அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ஒழித்துவிட்டு, பொதுச் செயலர் பதவியை உருவாக்கி அதில் அமர, பழனிசாமி முடிவு செய்துள்ளார். அவருக்கு, கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள், ஆதரவு தெரிவித்துள்ளனர்.ஆனால், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 23ம் தேதி நடந்த

சென்னை:அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ஒழித்துவிட்டு, பொதுச் செயலர் பதவியை உருவாக்கி அதில் அமர, பழனிசாமி முடிவு செய்துள்ளார். அவருக்கு, கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள், ஆதரவு தெரிவித்துள்ளனர்.


ஆனால், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில், பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்த, அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. வரும் 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என, பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது.இது தொடர்பாக, சட்ட விதிகளை சுட்டிக்காட்டி, பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் பழனிசாமி தரப்பில் வழக்கு தொடர்ந்தால், தன்னை கேட்காமல் தீர்ப்பளிக்கக் கூடாது என, பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தல் கமிஷனில் பன்னீர்செல்வம் அளித்த மனுவுக்கு, பதில் அளிக்கும் வகையில், பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்துவிட்டு, பொதுச்செயலர் பதவியை உருவாக்க, பொதுக்குழு உறுப்பினர்கள் விரும்புவதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்துடன், அந்த மனு அளிக்கப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X