கட்சி தேர்தல் வழக்கில் பழனிசாமி 'அப்பீல்'

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
சென்னை:அ.தி.மு.க., உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர, இருவருக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 'பொதுச் செயலர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர்

சென்னை:அ.தி.மு.க., உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர, இருவருக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.


திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 'பொதுச் செயலர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது, கட்சி விதிகளுக்கு எதிரானது' என கூறியிருந்தனர்.


இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்யும் படி, பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர இருவருக்கும் அனுமதி அளித்தார். 2022 ஏப்ரல் 26ல் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இம்மனுவை, 15 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்திருப்பதால், அதை அனுமதிக்கக் கோரி, இடைக்கால மனுவும் தாக்கல் செய்துள்ளார்.


இடைக்கால மனு, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவை அனுமதிப்பது குறித்து, ராம்குமார் ஆதித்தன், சுரேன், நான்கு வாரங்களில் பதில் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X