இன்று விண்ணில் பாயுது பி.எஸ்.எல்.வி.,- சி53

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : மூன்று செயற்கைக் கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட்டை இன்று (ஜூன் 30) விண்ணில் ஏவ 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.'இஸ்ரோ'எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு நாட்டின் பாதுகாப்பு தொலை தொடர்பு தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதுதவிர வணிக
 3 செயற்கை கோள்கள், இன்று விண்ணில்   பி.எஸ்.எல்.வி.,- சி53


சென்னை : மூன்று செயற்கைக் கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட்டை இன்று (ஜூன் 30) விண்ணில் ஏவ 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.

'இஸ்ரோ'எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு நாட்டின் பாதுகாப்பு தொலை தொடர்பு தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதுதவிர வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.


latest tamil news




ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான டி.எஸ். - இ.ஓ. உட்பட மூன்று செயற்கைக் கோள்கள் பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட் வாயிலாக இன்று மாலை 6:00 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 25 மணி நேர 'கவுன்ட் டவுன்' நேற்று (ஜூன் 29) மாலை 5:00 மணிக்கு துவங்கியது. சிங்கப்பூரை சேர்ந்த மூன்று செயற்கைக் கோள்களில் முதன்மையானதான டி.எஸ். - இ.ஒ. செயற்கைக் கோள் 365 கிலோ எடை உடையது. இது தெளிவாக வண்ண புகைப்படங்களை எடுக்கும் திறன் உடையது.


அடுத்து 155 கிலோ எடை உடைய 'நியூசர்' செயற்கைக்கோள் இரவு பகல் என அனைத்து வானிலை சூழலிலும் புவியை துல்லியமாக படம் எடுக்கும். சிங்கப்பூரை சேர்ந்த நன்யாங் தொழில்நுட்ப பல்கலை மாணவர்கள் வடிவமைத்த 2.8 கிலோ எடை உடைய 'ஸ்கூப் - 1' செயற்கைக்கோள் கல்வி பணிகளுக்காக அனுப்பப்பட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-202207:54:35 IST Report Abuse
ravi chandran Greetings
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202206:04:37 IST Report Abuse
Mani . V அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விண்ணை நோக்கிப் பாய்கிறது.
Rate this:
30-ஜூன்-202207:29:22 IST Report Abuse
சின்னாளம்பட்டி சின்னவர் உங்க ஊரில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறுகிறது என்றால் அதற்கும் மோடி தான் காரணமா? இந்தியாவில் அப்படி ஆகிறது என்றால் முதலில் இலவசம் என்று அலைந்து கொண்டிருக்கும் மக்களை இனி இலவசம் வேண்டாம் என்று சொல்ல சொல்லுங்க, அதனால் இலவசம் கொடுக்கிறோம் என்று திருடும் அரசியல்வாதிகள் இடம் இருந்து தப்பிக்கலாம், விலையேற்றமும் கட்டுக்குள் வரும் ஒரு புறம் வெளிநாட்டில் இருந்து காசு வாங்கி இந்தியாவுக்கு எதிராய் இந்தியாவில் இருந்தே குழிபறிக்கும் முதலைகள் இன்னொரு புறம் இலவசம் கொடுக்கிறோம் என்று திருடும் அரசியல்வாதிகள் நீங்க யாரை முதலில் வெளியேற்ற போறீங்க யுவர் ஹானர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X