ஆக.,6ல் துணை ஜனாதிபதி தேர்தல்: ஜூலை 5 முதல் வேட்பு மனு தாக்கல்

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி-'துணை ஜனாதிபதி தேர்தல், ஆக., 6ம் தேதி நடக்கும். அன்றைய தினமே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்' என, தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-'துணை ஜனாதிபதி தேர்தல், ஆக., 6ம் தேதி நடக்கும். அன்றைய தினமே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்' என, தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.



latest tamil news



துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், ஆக., 6ல் தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

அன்றைய தினமே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.வேட்பு மனு தாக்கல் ஜூலை 5ல் துவங்குகிறது. ஜூலை 19, வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 20 முதல் வேட்பு மனு மீதான பரிசீலனை துவங்குகிறது.


latest tamil news



துணை ஜனாதிபதியின் சிறப்பு

l இவர் தான் ராஜ்யசபாவின் தலைவர் l பதவிக்காலம் 5 ஆண்டுகள் l ஜனாதிபதிக்கு அடுத்து 2வது உயரிய பதவி. l ஜனாதிபதி மறைவு, ராஜினாமாவின் போது, பொறுப்பு ஜனாதிபதியாக செயல்படுவார் l ராஜ்யசபாவில் நடக்கும் மசோதா, தீர்மானம் உள்ளிட்ட ஓட்டெடுப்புகளில், ஓட்டளிக்க முடியாது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை முடிவு சமமாக இருக்கும்போது இவர் வாக்களிக்கலாம் l நாட்டின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்கு செல்லலாம்.



l இவர் தான் ராஜ்யசபாவின் தலைவர் l பதவிக்காலம் 5 ஆண்டுகள் l ஜனாதிபதிக்கு அடுத்து 2வது உயரிய பதவி. l ஜனாதிபதி மறைவு, ராஜினாமாவின் போது, பொறுப்பு ஜனாதிபதியாக செயல்படுவார் l ராஜ்யசபாவில் நடக்கும் மசோதா, தீர்மானம் உள்ளிட்ட ஓட்டெடுப்புகளில், ஓட்டளிக்க முடியாது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை முடிவு சமமாக இருக்கும்போது இவர் வாக்களிக்கலாம் l நாட்டின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்கு செல்லலாம்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202206:37:59 IST Report Abuse
Kasimani Baskaran திமுக ஆதரவு ஜனாதிபதியா இல்லையா என்பது போகப்போகத்தான் தெரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X