தனியார் நிறுவனங்கள் எண்ணெய் விற்பனை கட்டுப்பாட்டை நீக்கியது அரசு

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
தனியார் எண்ணெய் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு மட்டும் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுஉள்ளது.டில்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:தற்போது தனியார் எண்ணெய் நிறுவனங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தனியார் எண்ணெய் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு மட்டும் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுஉள்ளது.டில்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடந்தது.



latest tamil news




இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:தற்போது தனியார் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றை அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க முடியும்.

இந்த விதிமுறையை நீக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி இனி தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களுடன், தனியார் நிறுவனங்களுக்கும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றை விற்பனை செய்யலாம்.


latest tamil news



இந்த உத்தரவால், உள்நாட்டில் மேலும் சுலபமாக தொழில் செய்ய வழி ஏற்படும். கடந்த, 2014 முதல், எண்ணெய் மற்றும் எரிவாயு வளப்பகுதி ஒதுக்கீடு இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அமைச்சரவைக் கூட்டத்தில், ஆரம்ப வேளாண் கடன் சங்கங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2,516 கோடி செலவில் கணினிமயமாக்கவும் ஒப்புதல் தரப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
30-ஜூன்-202208:08:18 IST Report Abuse
Ram சரியான வழி... படிப்படியாக அரசு நிறுவனங்களை குறைக்கவேண்டும்.. அரசு கல்வி மற்றும் மருத்துவத்தை மட்டுமே வைத்திருக்கவேண்டும் ... மற்றவற்றை கண்காணிக்கவேண்டும்
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202212:46:01 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஉங்களுக்கு சபாஷ் ............
Rate this:
Cancel
30-ஜூன்-202207:23:16 IST Report Abuse
அப்புசாமி என்னவோ பல தனியார் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை விக்க ரெடியா இருக்கற மாதிரி பில்டப்.
Rate this:
30-ஜூன்-202215:01:12 IST Report Abuse
V Venkatachalam, Chennai-87அப்புவுக்கு ஆப்பு! போட்டாச்சு. நீ ரொம்ப அரண்டுட்டே இல்லையா? அப்ப நல்ல விஷயம் தான்.....
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
30-ஜூன்-202206:49:04 IST Report Abuse
Rpalnivelu பொதுத்துறையை சுரண்டி வயிற்றை வளர்ப்பவர்களுக்கு இனி சாவு மணிதான் இனி எல்லாமே தனியார் மயமே, "வாழ்க வளர்க" தான் இனி தாரக மந்திரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X