எனக்கு ஆதரவாக யாரும் இல்லை: சித்தராமையா புலம்பல் உண்மையா?

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
பெங்களூரு : எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, காங்கிரசில் தனித்து விடப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தனக்கு ஆதரவாக யாருமில்லை என, தன் ஆதரவாளர்களிடம் அவர் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில், மைசூருக்கு சென்றிருந்த சித்தராமையா, 'நான் வாயை திறந்து பேசினால், எதிராளி பா.ஜ.,வினர் பலரும், என் மீது நாய்களை போன்று பாய்கின்றனர். ஆனால் காங்கிரசில், எனக்கு
எனக்கு ஆதரவாக யாரும் இல்லை: சித்தராமையா புலம்பல் உண்மையா?

பெங்களூரு : எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, காங்கிரசில் தனித்து விடப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தனக்கு ஆதரவாக யாருமில்லை என, தன் ஆதரவாளர்களிடம் அவர் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், மைசூருக்கு சென்றிருந்த சித்தராமையா, 'நான் வாயை திறந்து பேசினால், எதிராளி பா.ஜ.,வினர் பலரும், என் மீது நாய்களை போன்று பாய்கின்றனர். ஆனால் காங்கிரசில், எனக்கு ஆதரவாக யாரும் நிற்பதில்லை. நான் தனி ஆளாகி விட்டேன்,' என புலம்பியதாக கூறப்பட்டது.பா.ஜ.,வினரை நாய்கள் என விமர்சித்தது, தனக்கு ஆதரவில்லை என வருத்தமடைந்தது, சர்ச்சைக்கு காரணமானது. சித்தராமையா பேச்சை பல அமைச்சர்கள், தலைவர்கள் வன்மையாக கண்டித்தனர்.

சில நாட்களுக்கு முன், கர்நாடக ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் எழுதிய புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய போதும், சித்தராமையா தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.இதை மறுத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர், 'மதவாதத்தை உறுதியாக எதிர்க்கிறார். அவரை போன்ற தலைமை குணம், பல விஷயங்களை உறுதியான குரலில் பேச, மற்றவர்களால் முடியாது.

அவரது கருத்து, கட்சியின் கருத்துதான்.'அவரை கட்சியின் அனைத்து தலைவர்கள், தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர். அவருக்கு ஆதரவாக, காங்கிரஸ் உள்ளது. அவருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில், காங்., செய்தி தொடர்பாளர் உட்பட மற்ற தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பேசுகின்றனர். இது சித்தராமையா கவனத்துக்கு வருவதில்லை' என விளக்கம் அளித்தனர்.

ஆனால், 'சித்தராமையா, காங்கிரசில் தனித்து விடப்பட்டது உண்மைதான்' என, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.'ஹிஜாப், இட ஒதுக்கீடு உட்பட, பல்வேறு விஷயங்களில், சித்தராமையா ஓங்கி குரல் கொடுத்தார். ஆனால் அவருக்கு, மற்ற தலைவர்கள் முழுமையான அளவில் ஆதரவளிக்கவில்லை. கட்சியில் சில தலைவர்கள் மட்டுமே, பா.ஜ., கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். மற்றவர்கள் தங்களுக்கு என்ன என, மவுனமாக உள்ளனர்' என, சித்து ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X