திரவுபதி முர்முவுக்கு ம.ஜ.த., முழு ஆதரவு

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பெங்களூரு : ''தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு, ம.ஜ.த., முழு ஆதரவு அளிக்கும்,'' என அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு; எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். சில நாட்களுக்கு முன்,
திரவுபதி முர்முவுக்கு ம.ஜ.த., முழு ஆதரவு

பெங்களூரு : ''தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு, ம.ஜ.த., முழு ஆதரவு அளிக்கும்,'' என அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு; எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். சில நாட்களுக்கு முன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தொடர்பான கூட்டத்தில், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் பங்கேற்றனர்.அப்போது, 'கூட்டத்தில் தேர்வு செய்யப்படும் வேட்பாளருக்கு ஆதரவளிக்கலாம்' என்ற மனப்பான்மையுடன் ம.ஜ.த., தலைவர்கள் இருந்தனர்.

இதற்கிடையில், திரவுபதி முர்மு, இரண்டு முறை தேவகவுடாவிடம் தொலைபேசியில் பேசி, ஆதரவு கேட்டார். நேரில் வந்தும் ஆதரவு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள ம.ஜ.த., அலுவலகத்தில், குமாரசாமி நேற்று கூறியதாவது:

திரவுபதி முர்முவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு ஏற்கனவே கிடைத்துள்ளது. ம.ஜ.த.,வின் ஆதரவு, அவருக்கு தேவை இருக்காது. இருந்தாலும், தேவகவுடாவிடம் ஆதரவு தரும்படி அவர் கோரியுள்ளார்.எனவே, அவருக்கு ம.ஜ.த., முழு ஆதரவு தரும். என் கணிப்புப்படி அவர் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டார். அவர் நேரில் வந்து ஆதரவு கோர வேண்டிய அவசியம் இல்லை.

முர்முவின் பின்னணி, வாழ்க்கையில் அவர் அனுபவித்த கஷ்டங்கள், கீழ்மட்டத்தில் இருந்து கடந்து வந்த பாதை என அவர் குறித்து முழு விபரம் அறிந்துள்ளேன்.ஒரு பழங்குடியின பெண், இவ்வளவு பெரிய உச்சத்துக்கு உயரும் அளவுக்கு சாதனை செய்திருப்பது ஊக்கமளிக்கிறது. காங்கிரஸ், பா.ஜ., ஆதரவு என்ற கேள்வியே எழாது. பா.ஜ.,வின், 'பி டீம்' நாங்கள் என்பது, இதற்கு பொருந்தாது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Sivagangai,இந்தியா
30-ஜூன்-202207:35:19 IST Report Abuse
Elango இந்த கஷ்டம் புண்ணாக்கு இதுளாம் விடுங்க பிஜேபி சொல்றத கேக்கணும் அதுக்கு பிஜேபி ஓட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தான் இதுவும் பிஜேபி கட்சில தான் இருக்கு மக்களை எத்தனை நாள் தான் ஏமாதுவீங்க...வடிவேல் பாசைல இதுவும் இவன் ஆளா..காமடி தான்.
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
30-ஜூன்-202206:31:33 IST Report Abuse
vadivelu இறுதியில் யஷ்வந்த் சின்ஹா போட்டியில் இருந்து விலகுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X