'ஆதார் - பான்' எண் இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம்

Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: 'பான்' எனும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், 'ஆதார்' எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால், நாளை(ஜூலை 1) முதல் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும்.அரசின் உத்தரவுப் படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இரு எண்களை இணைப்பதற்கு நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என வருமான வரி துறை
Link Aadhaar with PAN,Aadhaar card,Pan,ஆதார்,ஆதார் அட்டை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 'பான்' எனும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், 'ஆதார்' எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால், நாளை(ஜூலை 1) முதல் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும்.

அரசின் உத்தரவுப் படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இரு எண்களை இணைப்பதற்கு நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என வருமான வரி துறை அறிவித்திருந்தது. பின் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதே சமயம், எண்களை இணைக்காமல் இருந்தவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், மத்திய அரசு, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கி அறிவித்தது.


latest tamil news


இருப்பினும், இதில் ஒரு பிடியையும் வைத்தது. மத்திய நேரடி வருமான வரி துறை, மார்ச் 31ம் தேதிக்கு பிறகு, ஜூன் 30ம் தேதிக்குள்ளாக இணைப்பவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவித்தது. மேலும், ஜூலை முதல் தேதியிலிருந்து இந்த அபராதம் ஆயிரம் ரூபாயாக வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தது.

இந்த புதிய நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இணைக்காவிட்டால், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, பான் கார்டு செயலற்றதாக ஆக்கப்படும். அதன் பிறகு அந்த எண்ணை எதிலும் பயன்படுத்த இயலாமல் போய்விடும் என்றும், கடந்த மார்ச் 30ம் தேதியன்று வருமான வரி துறை அறிவித்திருந்தது .எனவே, நாளை முதல் அபராதம் இரு மடங்காக உயர்கிறது, உஷார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-202209:56:45 IST Report Abuse
சூரியா இந்த அறிவிப்பு, வெளிநாட்டில் வாழ் இந்தியர்களுக்குப் பொருந்தாது எனத் தெளிவாக எழுதியுள்ளது. Unfortunately, இது விஷயமாக வரும் அறிக்கைகளில், இந்த விபரம் மேற்கோடிட்டுக்காட்டி அறிவிக்கப்படுவதில்லை.
Rate this:
Cancel
sun mohan -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-202205:11:11 IST Report Abuse
sun mohan வெளி நாட்டில் வேலை பார்க்கும் இந்தியர் பான்கார்டு இல்லை என்றால் எப்படி இணைக்க முடியும்? நாடு திரும்பி பான்கார்டு பதிவு செய்து கிடைத்த பின்பு தானே இணைக்க முடியும்.
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202207:00:24 IST Report Abuse
Kasimani Baskaranவெளிநாட்டில் வேலை மூலம் நேர்மையாக சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு போகும்பொழுது அந்தப்பணத்துக்கு வருமானவரி கிடையாது. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் வருமானவரித்துறையுடன் இந்தியா தகவல் பரிமாறிக்கொள்ளும் அளவில் ஒப்பந்தங்களை போட்டிருக்கிறது. ஆகவே கவலைப்படத்தேவையில்லை. சட்டப்படி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆதர் கூட கொடுக்கப்டுவது கிடையாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X