குடிநீர் வினியோக பிரச்னைக்கு காரணம் என்ன? உண்மையை போட்டுடைத்த அதிகாரிகள்

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
கோவை-கோவை மாநகராட்சி வடக்கு மண்டல மாதாந்திர கூட்டம், மண்டல அலுவலகத்தில் நடந்தது. தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி நிர்வாக பொறியாளர் செந்தில் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:l கவுன்சிலர்களாகி மூன்று மாதங்களாகி விட்டது. இன்னும் குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியவில்லை. 12 அல்லது, 15 நாட்களுக்கு ஒருமுறையே

கோவை-கோவை மாநகராட்சி வடக்கு மண்டல மாதாந்திர கூட்டம், மண்டல அலுவலகத்தில் நடந்தது. தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி நிர்வாக பொறியாளர் செந்தில் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:l கவுன்சிலர்களாகி மூன்று மாதங்களாகி விட்டது. இன்னும் குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியவில்லை. 12 அல்லது, 15 நாட்களுக்கு ஒருமுறையே வழங்குகிறோம்.l அம்ரூட் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணியை ஓரிடத்தில் முடித்து விட்டு, மற்றொரு இடத்தில் துவக்க வேண்டும். லீக்கேஜ் சரி செய்த பின், தண்ணீர் சப்ளை செய்தால் மீண்டும் லீக்கேஜ் ஆகிறது. l குழாய் பதிக்க தோண்டும் குழிகளை சரி வர மூடுவதில்லை. மூடினாலும் மணல் திட்டுகளாக குவித்து வைப்பதால், வாகன போக்குவரத்துக்கு சிரமமாக இருக்கிறது.l



கடந்த ஆட்சியில் போர்வெல் ஆபரேட்டர் ஒப்பந்தம் எடுத்தவர்கள் ஊழல் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கே மீண்டும் வேலை கொடுக்கக் கூடாது.l துடியலுார் பகுதிக்கு போர்வெல் குறைவாக இருக்கிறது. தற்போது இரு இடங்களில் அமைக்க அனுமதி கொடுத்திருந்தாலும் போதாது. கூடுதல் இடங்களில் போட்டுத் தர வேண்டும். 20 கேட்வால்வுகளை புதுப்பிக்க வேண்டும்.l வார்டுகளில் மின் கம்பம் இருக்கு; விளக்கு இருக்கு; மின் இணைப்பு இல்லை. ரிசர்வ் சைட்டுகளில் ரேஷன் கடை கட்டித்தர வேண்டும். நகர் நல மையம் கட்ட பூமி பூஜை போட்டும், இன்னும் வேலை ஆரம்பிக்கவில்லை.* மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்ட வேண்டும். பூங்காக்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு செட் சீருடை, கையுறை வழங்க வேண்டும்.இவ்வாறு, கவுன்சிலர்கள் கூறினர்.




அண்டர்ஸ்டாண்டிங் இல்லை



குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மின் வினியோகம் தடைபடுவதால், குடிநீர் பம்ப் செய்ய முடிவதில்லை. மின்வாரியத்துக்கும், குடிநீர் வடிகால் வாரியத்துக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருக்கிறது. மூன்று இடங்களில் பம்ப் செய்து, குடிநீர் கொண்டு வருகிறோம்.ஒரே வரிசையில் வரும் இப்பகுதிகளில், ஒரே நாளில் மின் தடை செய்வர். மீண்டும் மின் சப்ளையாகும்போது, பம்ப் செய்து, தண்ணீர் சப்ளை செய்வோம். இப்போது, ஏரியாக்களை மாற்றி மாற்றி மின் தடை செய்வதால், தண்ணீர் பம்ப் செய்ய முடிவதில்லை.



இதன் காரணமாகவே, தேவையான அளவு எடுக்க முடிவதில்லை. ஒரே நாளில் மின் தடை செய்தால், குடிநீர் வினியோக பிரச்னை வராது' என்றனர்.20வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மரியராஜ் கூறுகையில், ''தி.மு.க., ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் வேலை செய்யாமல் இருக்கின்றனர்,'' என்று அதிகாரிகள் மீது பகிரங்கமாக பழியை போட்டார்.


'குப்பை லாரி இல்லாத மாநகராட்சி உருவாக்க முயற்சி'

வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் பேசியதாவது:l சூயஸ் மற்றும் அம்ரூட் திட்டம் செய்வோர், அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் பேசி, எந்தெந்த வீதிகளில் செய்ய வேண்டுமென முடிவெடுத்து, அட்டவணையிட வேண்டும். ஒரு வீதியில் அனைத்து வேலைகளையும் முடித்த பிறகே அடுத்த வீதிக்கு செல்ல வேண்டும்.l போர்வெல் இயக்குபவர்கள், அதன் தற்போதைய நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளோம்.l நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையில் அனுமதி பெற வேண்டியிருந்தால், அலுவலர்கள் எங்களது கவனத்துக்கு கொண்டு வாருங்கள். நாங்கள் அவர்களிடம் பேசி அனுமதி பெற்றுத் தருகிறோம்.l தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்து, பிடித்த இடத்திலேயே விட வேண்டும். இதற்கு மாற்று ஏற்பாடாக என்ன செய்ய வேண்டுமென, மாமன்ற கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு கருத்துரு அனுப்புவோம்.l வெள்ளலுாரில் குப்பை கொட்ட இடமில்லாத சூழல் இருக்கிறது. குப்பையை தரம் பிரித்து சேகரித்து, அதே வார்டிலேயே அழிப்பதற்கான ஏற்பாடு செய்யப்படுகிறது. வண்டிகள், தொட்டிகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.l காலை 7:00-9:00 மணிக்குள் வீடு வீடாகச் சென்று, குப்பையை தரம் பிரித்து சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குப்பை லாரி இல்லாத மாநகராட்சி உருவாக்க முயற்சிக்கிறோம். மக்களிடம் கவுன்சிலர்கள் புரிய வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X