மாணவருக்கான நகர பட்டியல்: சென்னையும் இடம் பிடித்தது

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பற்றிய கியூ.எஸ்., தரவரிசை பட்டியலில், மும்பை, பெங்களூரு, சென்னை, புதுடில்லி ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த கியூ.எஸ்., எனப்படும் குவாக்குவாரளி சைமண்ட்ஸ் நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச அளவில் ஆய்வு செய்து, சிறந்த பல்கலைக்கழகங்கள், சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த கல்வி நகரங்கள் பட்டியலை
Best Student Cities, QS ranking, Chennai

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பற்றிய கியூ.எஸ்., தரவரிசை பட்டியலில், மும்பை, பெங்களூரு, சென்னை, புதுடில்லி ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த கியூ.எஸ்., எனப்படும் குவாக்குவாரளி சைமண்ட்ஸ் நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச அளவில் ஆய்வு செய்து, சிறந்த பல்கலைக்கழகங்கள், சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த கல்வி நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.



நான்கு நகரங்கள்


இந்த ஆண்டுக்கான சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலை, கியூ.எஸ்., நேற்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 140 நகரங்கள் இடம் பெற்றுள்ள இந்தப் பட்டியலில், இந்தியாவின் நான்கு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை, 103வது இடத்தையும், கர்நாடக தலைநகர் பெங்களூரு, 114வது இடத்தையும், சென்னை, 125வது இடத்தையும், புதுடில்லி, 129வது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு மும்பை, பெங்களூரு நகரங்கள் மட்டுமே இதில் இடம் பெற்றிருந்தன.


latest tamil news





நடவடிக்கை


இந்தப் பட்டியலில் முதல் இடத்தை தொடர்ந்து நான்காவது ஆண்டாக, பிரிட்டன் தலைநகர் லண்டன் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை தென் கொரியா தலைநகர் சியோல் பிடித்துள்ளது. இந்தியாவில் 2018 - 19ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, வெளிநாடுகளைச் சேர்ந்த 47 ஆயிரத்து 427 மாணவர்கள் தான், உயர் கல்வி படிக்கின்றனர். இதை, 2023ம் ஆண்டுக்குள் இரண்டு லட்சமாக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
30-ஜூன்-202212:04:08 IST Report Abuse
தமிழன் எங்கெல்லாம் பப்பு அதிகமா இருக்கு, அது நல்ல நகரம்.
Rate this:
Cancel
Suresh, UK -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-202210:10:04 IST Report Abuse
Suresh, UK Most from India coming here in the name of student and doing job. Especially newly married couples.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-ஜூன்-202206:35:54 IST Report Abuse
Natarajan Ramanathan வெளிநாட்டு மாணவர்கள் (குறிப்பாக நைஜீரிய மாணவர்களால்) நமது நாட்டு மாணவர்களுக்கு போதை மருந்து கலாச்சாரம் பரவுவதால் இது வேண்டாத வேலை என்றே தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X