சிலவரி அரசியல்....

Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
வருகிற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 எம்.பி.,க்கள் பா.ஜ.,வுக்கு கிடைக்கப்போவது உறுதி. நிச்சயம் அந்த மாற்றம் நடக்கும்.- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்கொரோனா பரவல் மிக தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை நாம் எதிர்கொண்டதை மக்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எனவே மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.- விஜயகாந்த்,



வருகிற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 எம்.பி.,க்கள் பா.ஜ.,வுக்கு கிடைக்கப்போவது உறுதி. நிச்சயம் அந்த மாற்றம் நடக்கும்.

- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்

கொரோனா பரவல் மிக தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை நாம் எதிர்கொண்டதை மக்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எனவே மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.- விஜயகாந்த், தே.மு.தி.க., தலைவர்தமிழகத்தில் பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படுவோரின் குடும்பங்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு (போக்சோ) சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை காலக்கெடுவிற்குள் அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.- வாசன், த.மா.கா., தலைவர்அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் வாழ்ந்து வரும் சென்னை, ராமாபுரம், திருமலை நகர் மக்களை, ஆக்கிரமிப்பாளர்களெனக் கூறி விரட்டத் துடிப்பதா?- சீமான், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்காமல் தி.மு.க., அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.- தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்ஜனாதிபதி தேர்தல் இரு வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி அல்ல; சனாதன சக்திகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் இடையிலான கருத்தியல் போர்.- திருமாவளவன், வி.சி., தலைவர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X